Priyanka Chopra Looks Gorgeous: ஸ்தம்பித்த மும்பை - பிங்க் நிற உடையில் அழகாக தோற்றமளித்த பிரியங்கா சோப்ரா
Priyanka Chopra Looks Gorgeous: மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா எப்போதும் போல் பிரகாசமாக இருந்தார். அவரது வடிவமும் ஆடையும் பலரையும் ஈர்த்தது.
Priyanka Chopra Looks Gorgeous: பிரியங்கா சோப்ரா வெள்ளிக்கிழமையான இன்று மாலை மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்,வெளிர் இளஞ்சிவப்பு நிற உடையில் தோன்றி பிரமிக்க வைத்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸுடனும் நேற்று(மார்ச் 14)-ல் மும்பையில் தரையிறங்கினார். நடிகை பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலான தோற்றத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அவரது ரசிகர் பக்கங்களால் அதிகம் பகிரப்பட்டன.
முன்னதாக, மும்பை நிகழ்வில் பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற உடையில் ஸ்டைலாக தோன்றினார். அப்போது ரசிகர்கள் அவரை 'குறைபாடற்றவர்' வடிவமைப்பு கொண்டவர் எனப் புகழ்ந்தனர்.
பிரியங்காவின் சமீபத்திய தோற்றம்
பிரியங்கா தனது வெளிர் இளஞ்சிவப்பு என்று அழைக்கப்படும் பிங்க் நிற உடையுடன் கூடிய தோற்றத்தை எளிமையாகவும் நேர்த்தியாகவும் செய்திருந்தார். அந்த உடை, ஒரு நவீன சுழலைக் கொண்டிருந்தது. அதை அவள் பொருத்தமான ரவிக்கையுடன் இணைத்து இருந்தார். கழுத்தில் ஒரு நெக்பீஸ் மற்றும் கை விரல்களில் பல மோதிரங்களுடன் அழகான தோற்றத்துடன் வந்திருந்தார், பிரியங்கா சோப்ரா. இந்த நிகழ்வில், பிரியங்கா தனது ரசிகர் மற்றும் ரசிகைகளைப் பார்த்து கையசைத்தார். அவரது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்காக புன்னகைத்தார். பல்கேரியின் உலகளாவிய பிராண்ட் தூதராக இருக்கும் பிரியங்கா சோப்ரா, நகை லேபிளை விளம்பரப்படுத்த மும்பைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா சோப்ராவின் ரசிகர் பக்கங்களில் அவரது தோற்றத்திற்கு பதிலளித்த ஒருவர், " பிரியங்கா பிரமிக்க வைக்கிறார்!" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "டேசி நிகழ்ச்சிகளில் பிரியங்காவைப் பார்ப்பதை மிஸ் செய்கிறேன்" என்று கூறினார். அதில், "பிரியங்கா படப்பிடிப்பில் பிசி இல்லை போல’’ என்ற ஒரு ரசிகர் ‘’இருந்தாலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.
பிரியங்கா தனது மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸுடன் இந்தியா திரும்பியுள்ளார். தாய்-மகள் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது நடிகை பிரியங்கா சோப்ரா, தனது குழுவினருடன் காத்திருந்து, ஒரு காரில் ஒன்றாக வெளியேறும் புகைப்படம் எடுக்கப்பட்டது. பிரியங்காவின் நீண்டகால மேலாளர் அஞ்சுலா ஆச்சார்யாவும் அந்த அழைப்பில் உடன் இருந்தார்.
பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் கதைகளில் தானும்; தன் மகள் மால்டி மேரி சோப்ராவும் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "மும்பை மாநகரே.. என் அன்பே.. இதோ வந்துட்டோம்!" என்று தனது மேலாளர் அஞ்சுலா ஆச்சாரியா மற்றும் மகள் மால்டியின் தனிப்பட்ட கணக்கையும், பல்கேரியின் கணக்கையும் டேக் செய்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரானார், பிரியங்கா சோப்ரா. மேலும் தேவ் படேல், மிண்டி காலிங் மற்றும் பலரும் அதன் இணை தயாரிப்பாளராக அணியில் சேர்ந்தனர்.
ஃபிராங்க் ஈ ஃப்ளவர்ஸ் இயக்கும் தி பிளஃப் படத்தில் பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் பார்ப்பார்கள். இதில் கார்ல் அர்பனும் நடிக்கிறார். அதில் பிரியங்கா சோப்ரா, ஜான் செனா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.
மும்பை ஊடகங்களின் கருத்தின்படி, இன்ஸ்டாகிராமில் 89.4 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு மூன்று கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கிறார். ஷாருக்கான் ரூ. 80 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிப்பதாகத் தெரிகிறது.
டாபிக்ஸ்