‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!

‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 18, 2025 08:55 AM IST

ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள். வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அவளுக்காக வரவேண்டும் என்று தோன்றுகிறது - பிரியங்கா த்ரோபேக்!

‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!
‘எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது.. தம்பி பாப்பாவுக்காக நான் எதுவும் செய்வேன்’- பிரியங்கா த்ரோபேக் பேட்டி!

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதற்கு பின்னதான காலம் பிரியங்காவின் சோகமான காலக்கட்டம். அந்த சமயத்தில் அவருக்கு பெருந்துணையாக இருந்தது அவர் தம்பி மகள் ஈகாவின் அன்புதான். அது குறித்து அவர் முன்னதாக கொடுத்த பேட்டிகளில் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

திமிராக இல்லை

அதில் அவர் பேசும் போது, “எதையுமே தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது. என்னிடமே நான் சொல்லிக்கொள்வது பிரியங்கா… உன்னை ஏமாற்றாத ஒரே விஷயம் தொழில் மட்டும்தான். இதிலிருந்து சம்பாதித்த மக்களை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இரு. உனக்கு என்ன சேர வேண்டுமோ அது வந்து சேரும். ஜெயிச்சுட்ட மாறா என்ற வசனத்தை நான் சில பேருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

சூரரைப்போற்று திரைப்படத்தில் இறுதியாக வரும் வசனமான, ஜெயிச்சுட்ட மாறா என்ற வசனத்தை நான் சில பேருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், திமிராக இல்லை.

ஆனால், ஜெயிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆகையால், அதை வெளிப்படுத்துவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதை சொல்ல வேண்டிய நேரத்தில் நான் சொல்கிறேன்.

அழுகை வருகிறது.

என்னவென்று தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் தற்போது அழுகை வருகிறது. எப்போது என்னுடைய தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னார்களோ, அப்போது இருந்தே என்னுடைய உலகம் அவர்களாக மாறிவிட்டார்கள்.

ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள்

ஈகா… அவள் தான் என்னுடைய தம்பியின் மகள். வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அவளுக்காக வரவேண்டும் என்று தோன்றுகிறது; வீட்டை விட்டு செல்லும் பொழுது, அவளுக்காக ஜெயித்து விட்டு வருகிறேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பது போல தோன்றுகிறது. அவள் என்னுடைய குழந்தை.. அவளுக்காக நான் எதுவேண்டுமென்றாலும் செய்வேன். அவள் என்ன கேட்டாலும் நான் வாங்கி கொடுப்பேன். அவள்தான் எங்கள் உலகம்.

ஒரு நாள் என்னுடைய தம்பி அவளுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று வந்து சொன்னான். அந்த சமயத்தில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட் ஆகி இருந்தேன்.

இதனையடுத்து அவன் ஒரு கடிதத்தில் அவனுடைய குழந்தை எழுதுவது போல, “நீ இங்கு வருவதற்குள் வயிற்றில் இருக்கும் நான் கொஞ்சம் வளர்ந்திருப்பேன். அப்போது என்னை வந்து பார் என்று எழுதியிருந்தான்.” அதை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் பத்திரமாக வைத்து இருந்தேன். அவள் பெயர் இகா. அவள் மகிழ்ச்சியை அள்ளித் தருபவள். எங்களது குடும்பத்தையே தலைகீழாக திருப்பியவள்.

அண்மையில்,சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு நானும் அம்மாவும் சென்று இருந்தோம். ஆனாலும் நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீடியோ காலில் பேசிவிடுவோம். நாங்கள் அவளிடம் சீக்கிரமாக வந்து விடுகிறோம் வந்து விடுகிறோம் என்று சொல்லும் பொழுது, அவள் கம் கம் என்று சொல்வாள்.

அதற்காகத்தான், அந்த அன்பிற்காகத்தான் நாங்கள் இவ்வளவு ஏங்குகிறோம். அவள் பார்ப்பதற்கு அப்படியே என்னை போலவே இருப்பாள். அதனால் அவளை நான் என்னுடைய குழந்தையாகவே பார்க்கிறேன். ” என்று பேசினார்.

உங்களுடைய மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும் தான் பொறுப்பு. எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை. சந்தோஷமாக சிரித்து, மற்றவனை வெறுப்பேத்திக் கொண்டே இருங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்; மனசாட்சிக்கு தவறானதை தயவு செய்து தொடாதீர்கள்” என்று பேசினார்.