தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priyamani: முன்னணி நடிகர்களுடன் ஏன் நடிக்கல? ‘வாய்ப்பு அவங்க தரல.. அங்க போய் கேளுங்க’ - உண்மையை உடைத்த பிரியாமணி!

Priyamani: முன்னணி நடிகர்களுடன் ஏன் நடிக்கல? ‘வாய்ப்பு அவங்க தரல.. அங்க போய் கேளுங்க’ - உண்மையை உடைத்த பிரியாமணி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2024 03:01 PM IST

பிரியாமணி சமீபத்தில் தென்னிந்திய திரையுலகில் தனது வாழ்க்கையை பற்றியும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காததற்கான காரணம் குறித்தும் பேசி இருக்கிறார்

Priyamani revealed why she is not offered films opposite A-listers of South cinema.
Priyamani revealed why she is not offered films opposite A-listers of South cinema. (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பேட்டியில் அவரிடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காதது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியாமணி, "நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஏன் தேர்வுசெய்யப்படவில்லை என்பதில் எனக்கும் ஆச்சரியம் இருக்கிறது.அதற்கு இப்போது வரை விடை கிடைக்கவில்லை.

இந்த கேள்வி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஆகும். உண்மையாகச் சொல்கிறேன். நான் யாரிடம் குறை கண்டுபிடித்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இதை பல பேரிடம் கேட்டு இருக்கிறேன். நான் அவர்களுடன் சேர்ந்து நடித்தாலோ இல்லை அவர்களது எதிரில் நின்று நடித்தாலோ அவர்களை நான் சாப்பிட்டு விடுவேன் (  நடிப்புத்திறமையால் அவர்கள் வென்று விடுவது)  என்று நினைக்கிறார்களாம். 

இதைத்தான் நான் நீண்ட காலமாக கேள்வி பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன்.” என்று பேசினார்.

 

முன்னதாக பாலிவுட் திரையுலகம் பற்றி பேசிய பிரியாமணி,  “ பாருங்கள்... நாங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த மொழியை (இந்தி) எங்களாலும் மிகவும் சரளமாக பேச முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நாங்களும் மற்றவர்களைப் போலவே அழகாகவே இருக்கிறோம். எங்களுடைய தோல் பாலிவுட் நடிகைகளைப் போல பிரகாசமாகவும், வெளிர் நிறமாகவும் இல்லைதான்.

ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்று நினைக்கிறேன். தெற்கிலிருந்து வரும் பெண்கள், தெற்கிலிருந்து வரும் ஆண்கள் என தெற்கிலிருந்து வரும் அனைவருக்கும் மொழி தெரியும். அவர்களாலும் ஹிந்தியை மிகவும் சரளமாக பேச முடியும்.

என்ன அங்கேயும், இங்கேயும் இலக்கணம் வேண்டுமானால் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால் எமோஷனை வெளிப்படுத்தும் சமயத்தில், அது ஒரு பொருட்டல்ல. வடக்கு மற்றும் தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள்தான்.” என்று பேசினார்.

 

யார் இவர்? 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை பிரியாமணி. அட்டகாடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனவர், கடந்த 2007ம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடித்து பரவலான கவனத்தை பெற்றார்.

அந்தப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். அதைத்தொடர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரத்தொடங்கிய அவர், ராம் (2009), ராவணன் (2010), ராவணன் (2010), சாருலதா (2012) உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய முத்திரையை பதித்தார்.

இந்திய அளவில் பெரிய கவனம் பெற்ற வெப் சீரிஸான தி ஃபேமிலி மேன் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்ட ஜவான் திரைப்படத்திலும், ஆர்டிகிள் 370 திரைப்படத்திலும் தோன்றி கவனம் ஈர்த்தார்.பிரியாமணி அடுத்ததாக மனோஜ் பாஜ்பாய், ஷரிப் ஹாஷ்மி மற்றும் ஷரத் கேல்கர் நடித்த தி ஃபேமிலி மேன் 3 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்