Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி!

Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி!

Priyadarshini R HT Tamil
Published Jul 11, 2024 06:00 AM IST

Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி படம் 20 ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படுகிறது. இயக்குனர் விக்ரமனின் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படம்.

Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி!
Priyamana Thozhi : காதல், நம்பிக்கை, ஆண், பெண் பெஸ்டிகளுக்கு அர்த்தம் என அனைத்தும் சொன்ன பிரியமான தோழி!

இந்நிலையில் மணிவண்ணன் திடீரென இறந்துவிடுவார். ஸ்ரீதேவிக்கு யாருடைய ஆதரவும் இருக்காது. அதனால் ஸ்ரீதேவியை தனது வீட்டிற்கு மாதவன் அழைத்து வருவார். அப்போது அவரது வீட்டில் பிரச்னைகள் ஏற்படும். ஸ்ரீதேவி, மாதவனுக்கு தொழிலில் உதவுவார். இதனால் அவர்களின் நட்பு நன்றாக வலுவடையும். எதிர்பாராத வகையில் ஜோதிகாவுக்கும், மாதனுக்கு காதல் ஏற்பட்டு, ஆச்சர்யமான முறையில் திருமணமும் நடைபெற்றவிடும்.

இவர்களின் நட்பை ஜோதிகா புரிந்துகொண்டு, ஆதரவற்ற ஸ்ரீதேவியை தங்கள் வீட்டிலேயே தங்க அனுமதிப்பார். அதற்காக அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கையைக் கூட துவங்காமல் இருப்பார்கள். மாதவன் வீடியோகிராஃபராக தொழில் செய்து வந்தாலும், அவரது கனவு கிரிக்கெட்தான். இந்தியாவுக்காக விளையாட பயிற்சியும், முயற்சியும் எடுத்து வருவார்.

வில்லனின் சூழ்ச்சி

ஸ்ரீதேவி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவார். அந்த பள்ளயின் தாளாளர் மகன் வினீத், ஸ்ரீதேவியை காதலித்து வருவார். இருவரும் காதலித்து வரும் நிலையில், பணக்காரரான வினீத்தின் தந்தைக்கு ஸ்ரீதேவி, மாதவனின் நட்பும், அவர் வீட்டில் ஸ்ரீதேவி தங்குவதும் பிடிக்காது. எனவே அவரை அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதனால் இருவரும் பிரிந்து விடுவார்கள்.

கிளைமேக்ஸ்

இந்திய அணிக்கான தேர்விலும் மாதவன் தேர்வான நிலையில் அதை ஸ்ரீதேவியின் நல்வாழ்க்கைக்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்று வினித்தின் தந்தை மாதவனுக்கு ஆணையிடுவார். உண்மையான நட்புக்காகவும், ஸ்ரீதேவியின் நல்வாழ்வுக்காகவும், தனது கனவை காவு கொடுப்பார் மாதவன். ஆனால், மாதவனின் கனவு நிறைவேறுமா? இருவரின் நட்பு மீண்டும துளிருமா என்பதுதான் கிளைமேக்ஸ்.

நட்புக்கு இலக்கணம்

ஆண்-பெண் நட்புக்கு இலக்கணமாய் அமைந்த இந்தப்படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. மாதவனின் அண்ணன் லிவிங்ஸ்டன், அண்ணியாக நிரோஷா நடித்திருப்பார்கள். இவர்கள் துவக்கதில் மாதவனுடன் இருப்பார்கள். பின்னர் வெளியூருக்கு பணியிடமாற்றம் பெற்று சென்று விடுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள். அதுவும் படத்துக்கு பெரும் பலமாகும். படத்தின் மற்றொரு பலம் பாடல்கள். பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார்.

இவரது இசையில் மான் குட்டியே புள்ளி மான் குட்டியே, பெண்ணே நீயும் பெண்ணா? பெண்ணாகிய ஓவியம், காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா, வானம் என்ன வானம் தொட்டுவிடலாம், ரோஜாக்களே, எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய், அட இத்தனை பேரழகா? ஆகிய அனைத்து பாடல்களுமே படு ஹிட்.

காதல் தரும் நம்பிக்கை

இந்தப்படத்தின் இயக்குனர் விக்ரமன், அவரது வழக்கமான குடும்ப பாணியினாலது இந்தப்படத்தின் கதை. நட்பின் ஆழம் மற்றும் காதல் தரும் நம்பிக்கை என இரண்டையும் இப்படம் கூறியிருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி, மாதவன் மற்றும் ஜோதிகா என மூவருக்குமே நல்ல பெயரை பெற்றுத்தந்த படம்.

20 ஆண்டுகளைக் கடந்து, 21ம் ஆண்டு நிறைவுபெறும் நிலையிலும் அனைவரும் விரும்பும் வகையில் சிறப்பான படமாக இந்தப்படம் இருந்துள்ளது. இந்த படம் வெளியான நாளில் அந்தப்படம் குறித்து ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.