தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Priyadharshini Latest Interview About Dhivyadharshini Fractures Leg During Lockdown

Dhivyadharshini: டிடிக்கு காலில் விழுந்த அடி.. ‘அவளுக்கு நடந்தது போல வேற யாருக்காவது..’ - பிரியதர்ஷினி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2024 06:00 AM IST

அதே இடத்தில் மிகவும் பாசிட்டிவான கமெண்ட்களும் இருக்கின்றன. அதனால் நீங்கள் அதில் உங்களுடைய கவனத்தை செலுத்தலாம்

பிரியதர்ஷினி பேட்டி!
பிரியதர்ஷினி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, ‘நம்மைப் பற்றி நெகட்டிவான கமெண்ட்கள் வருவதை நம்மால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். அது அவர்களைச் சார்ந்தது. அது நம்மைச் சார்ந்தது இல்லை. அதற்கு பதில் கமெண்ட் அடித்துக் கொண்டு இருப்பது தேவையில்லாத வேலை.

அதே இடத்தில் மிகவும் பாசிட்டிவான கமெண்ட்களும் இருக்கின்றன. அதனால் நீங்கள் அதில் உங்களுடைய கவனத்தை செலுத்தலாம்

இன்றும் அவளுக்கு காலில் பிரச்சினை இருந்தாலும், அவர் தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து கொண்டேதான் இருக்கிறார். 

உண்மையில் அது மிகவும் பெரிய விஷயம். எங்கள் குடும்பத்தில் அவரைத் தவிர வேறு யாருக்காவது இது போல நடந்திருந்தால், அவர்கள் டிடி -யை போல தொடர்ந்து முன்னேறி இருப்பார்களா என்பது தெரியவில்லை. 

டிடி தன்னுடைய துன்பத்தில் இருந்து மீண்டு எழுந்தார் என்று சொல்ல முடியாது. அதை அவர் எப்படி கையாளுகிறார் என்று பாருங்கள். ஒரு விஷயம் நடக்கும் பொழுது அந்த விஷயத்தை நாம் பார்க்கும் விதம் நம்முடைய கையில் தான் இருக்கிறது. அவருடைய விஷயத்தில் அது தெரிகிறது. அவர் செய்வது அவருக்கு மட்டும் அல்ல பிறருக்கும் பயன்படுகிறது. அந்த விதத்தில் அவர் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்அது மிக மிக சந்தோஷமான விஷயம் மட்டுமல்ல மரியாதைக்குரிய விஷயமும் கூட” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.