HBD Prashanth: 'காதல் இளவரசன்.. ஆணழகன்..' விஜய், அஜித்துக்கு டப் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்!
HBD Prashanth: 1990 காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ. அப்போதைய டாப்ஸ்டார் இவர் தான். இன்று திரை உலகில் தளபதி, தல என்று இன்று கோலோச்சி கொண்டிருக்கும் விஜய், அஜித் எல்லாம் அப்போது இவரைத் தாண்டி பிரபலமாக முடியவில்லை. அந்த வகையில் விஜய், அஜித்துக்கு டப் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்.

HBD Prashanth: பதினேழாம் வயதில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்து சிகரம் தொட்ட நடிகர் பிரசாந்த் பிறந்த நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.
1990 காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ. அப்போதைய டாப்ஸ்டார் இவர் தான். இன்று திரை உலகில் தளபதி, தல என்று இன்று கோலோச்சி கொண்டிருக்கும் விஜய், அஜித் எல்லாம் அப்போது இவரைத் தாண்டி பிரபலமாக முடியவில்லை. அந்த வகையில் விஜய், அஜித்துக்கு டப் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த். 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ல் நடிகர் தியாகராஜன் மற்றும் சாந்தி தம்பதியினரின் மூத்த மகனாக சென்னையில் பிறந்தார்.
படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பிய பிரசாந்த் மருத்துவ கல்லூரியி சேர்ந்த போதும் அவருடைய தந்தை நடிகர் தியாகராஜனுடைய ஆசை வேறாக இருந்தது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக மாற்றி விட ஆசைப்பட்டு அவரை லண்டனில் உள்ள டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் பயிற்சி நிறுவனம் சென்று நடிப்பு பயிற்சி பெற்றார். அவர்கள் ஆசைப்படி தனது பதினேழாம் வயதில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் மூலம் 1990 ல் அறிமுகம் ஆனார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது.
