OTT MOVIES: மிர்சாபூர் முதல் கருடன் வரை… பிரைம் டே ஸ்பெஷல்.. பிரைமில் சூப்பர் படங்கள்! - ஓடிடி அலசல்!
OTT MOVIES: அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3, ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. - ஓடி டி அலசல்!
ஜூலை 20 மற்றும் 21ம் தேதிகளில் வரவுள்ள 'பிரைம் டே 2024' சிறப்பு நாளை முன்னிட்டு, தனது பிரைம் உறுப்பினர்களுக்காக, 5 மொழிகளில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அமேசான் பிரைம் வழங்கி இருக்கிறது.
என்னென்ன படங்கள்?
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3, ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதே போல உலகளாவிய பிளாக்பஸ்டர் ஒரிஜினல் தொடரான தி பாய்ஸ் (ஆங்கிலம்) சீசன் 4-ன் புதிய எபிசோடுகள், பிரைம் டே வரை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூடவே, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான மொழியில் நிகழ்ச்சிகளை அனுபவிக்கும் விதமாக, இவ்விரண்டு தொடர்களும் பல இந்திய மொழிகளில், சப்டைட்டிலுடன், டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரரின் தொழில்முறை விளையாட்டு களத்தின் இறுதி பன்னிரண்டு நாட்களைப் பின்தொடரும் ஃபெடரர்: ட்வெல்வ் ஃபைனல் டேஸ் (ஆங்கிலம்) என்ற ஆவணப்படம், டிஸ்டோபியன் த்ரில்லர் சிவில் வார் (ஆங்கிலம்), ஹிப் ஹாப் தமிழா வின் PT சார் (தமிழ்), விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட நாச் கா குமா (மராத்தி), ஹீஸ்ட் காமெடியான கம் கம் கணேஷா (தெலுங்கு), வரலாற்று கதையை அடிப்படையாக வைத்து வெளியான மை லேடி ஜேன் தொடர் (ஆங்கிலம்), சர்மாஜி கி பேட்டி (இந்தி), மற்றும் சந்தானத்தின் நகைச்சுவை படமான இங்க நான் தான் கிங்கு (தமிழ்) போன்ற திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் முன்னதாகவே வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.
கருடன் முதல் ஸ்பேஸ் கேடட் வரை
கூடவே, ஆக்ஷன் த்ரில்லர் படமான கருடன் (தமிழ்), ரொமான்ஸ் காமெடி கலந்த ஸ்பேஸ் கேடட் (ஆங்கிலம்), மற்றும் துப்பறியும் காமெடி களம் கொண்ட மை ஸ்பை: தி எடர்னல் சிட்டி (ஆங்கிலம்) ஆகியவையும் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
மேலும் சிறப்புச் சேர்க்கும் நோக்கில், பிரைம் டேவை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அனிம் உள்ளடக்கத்தை அனுபவிக்க வேண்டி, பிரைம் வீடியோ சேனலில் க்ரஞ்சிரோல்-ஐயும் பிரைம் வீடியோ அறிமுகப்படுத்தியுள்ளது
கூடுதல் சந்தாவாக மாதத்திற்கு 79 ரூபாய் செலுத்தி இதனை ரசிக்கலாம். கூடுதலாக, MGM+, Lionsgate Play, Discovery+, Sony Pictures Stream, hoichoi, ManoramaMAX, Mubi, VROTT போன்ற பிற பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளின் ஆட்-ஆன் சந்தாக்களை வாங்கும் போது 50% வரை தள்ளுபடியை அனுபவிக்கும் வசதியும் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
திரைப்பட விபரங்கள், தேதிகள்
தி பாய்ஸ் (சீசன் 4) ஆங்கிலம் ஜூன் 13, 2024 துவங்கி ஜூலை 18, 2024 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய அத்தியாயங்களுடன் வெளியாகும்
பெடரர்: டுவெல்வ் ஃபைனல் டேய்ஸ் ஆங்கிலம் (20 ஜூன் 2024)
கம் கம் கணேஷா தெலுங்கு
(20 ஜூன் 2024)
PT சார் தமிழ் (21 ஜூன் 2024)
நாச் கா குமா மராத்தி (21 ஜூன் 2024)
மை லேடி ஜேன் ஆங்கிலம் (27 ஜூன் 2024)
சிவில் வார் ஆங்கிலம் (28 ஜூன் 2024)
ஷர்மாஜி கி பேட்டி ஹிந்தி (28 ஜூன் 2024)
இங்க நான் தான் கிங்கு தமிழ் ( 28 ஜூன் 2024)
சத்யபாமா- தெலுங்கு (28 ஜூன் 2024)
கருடன்- தமிழ் ( 3 ஜூலை 2024)
ஸ்பேஸ் கேடட் ஆங்கிலம் ஜூலை 4, 2024
மிர்சாபூர் (சீசன் 3) ஹிந்தி - 5 ஜூலை 2024
மை ஸ்பை: தி எடெர்னல் சிட்டி ஆங்கிலம் - 18 ஜூலை 2024
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்