தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Youtuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை

YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை

Kalyani Pandiyan S HT Tamil
May 21, 2024 05:18 PM IST

YouTuber Irfan: யூடியூபர் இர்பானை விசாரிக்க நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து இருக்கிறது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்தக்குழு பரிந்துரையாக அளிக்கும் - சுகாதாரத்துறை

YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை
YouTuber Irfan: குழந்தை பாலினத்தை வெளியிட்ட விவகாரம்; இர்ஃபானை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - சுகாதாரத்துறை (YouTuber Irfan)

ட்ரெண்டிங் செய்திகள்

இர்ஃபானின் மனைவி கர்ப்பம்

 

இர்ஃபானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார் இர்ஃபான். அவர் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார், அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார், இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார் இர்ஃபான்.

Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை

 

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த Youtuber இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. 

இந்த நிலையில், Youtuber இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து இருக்கிறது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்தக்குழு பரிந்துரையாக அளிக்கும்.

விபத்தில் சிக்கிய கார்

 

முன்னதாக, மறுவீட்டிற்காக மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இவரது காரானது மறைமலை நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் முன்னதாக வெளியாகின. இந்த நிலையில் அன்றைய தினம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  “கல்யாணம் முடிந்த பத்து நாட்களில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பதை என் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது. மீண்டும் காரில் உட்காருவதற்கு பயமாக இருக்கிறது. நாங்கள் சந்தித்த விபத்தின் அந்த பகுதியிலேயே அன்றைய தினம் நான்கு விபத்துக்கள் நடந்தது. அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி மட்டும் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடப்பட்டன.” என பேசி இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்