‘பெரியப்பா பாட்டால படம் ஓடுச்சா.. உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியும்.. அஜித்தால்தான்’ - அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘பெரியப்பா பாட்டால படம் ஓடுச்சா.. உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியும்.. அஜித்தால்தான்’ - அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!

‘பெரியப்பா பாட்டால படம் ஓடுச்சா.. உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியும்.. அஜித்தால்தான்’ - அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 23, 2025 11:47 AM IST

என்னவென்று எல்லோருக்குமே தெரியும். இந்த படம் அஜித்தினால் மட்டுமே தான் ஓடியது. அஜித் படம் அஜித்தால் மட்டுமே ஓடும். -அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!

‘பெரியப்பா பாட்டால படம் ஓடுச்சா.. உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியும்.. அஜித்தால்தான்’ - அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!
‘பெரியப்பா பாட்டால படம் ஓடுச்சா.. உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியும்.. அஜித்தால்தான்’ - அப்பாவிற்கு பிரேம்ஜி பதிலடி!

இது குறித்து சென்னையில் தன்னுடைய வல்லமை படத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரேம்ஜி, ‘என்னுடைய அப்பா பேசியதற்கு அனைவரும் என்னை டேக் செய்து திட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய அப்பா அவரது அண்ணனுக்கு ஆதரவு தரும் வகையில் பேசி இருக்கிறார். என்னுடைய அண்ணனை பற்றி ஏதாவது வந்தால் நான் அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுவேன்.

என்னுடைய அப்பா இளையராஜா பாடல் இருந்ததினால் தான் குட் பேட் அக்லி படம் ஓடியதாக பேசியதாக கேட்கிறீர்கள்.. ‘அதில் உண்மை கிடையாது உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். இந்த படம் அஜித்தினால் மட்டுமே தான் ஓடியது. அஜித் படம் அஜித்தால் மட்டுமே ஓடும். ராயல்டி தொகை என்பது எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு தொகை தான். அது இசை அமைப்பாளர் மட்டுமல்லாமல் பாடகருக்கு கூட வரும்.

ஏன் எனக்கே வருகிறது. நான் 15 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். அந்தப் படங்களுக்கான ராயல்டி தொகை இன்னும் எனக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ராயல்டி தொகை வருவது என்பது மிகவும் நல்ல விஷயம். நீங்கள் இப்போது மைக்கேல் ஜாக்சன் பாட்டை கேட்கிறீர்கள் என்றால், அவருக்கு அதற்கான சிறிய தொகை செல்லும் அது நல்ல விஷயம் தான்.’ என்று பேசினார்.

அப்படி என்ன பேசினார் கங்கை அமரன்

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், ‘இளையராஜா தனது பாடல்களுக்கான ராயல்டி தொங்கையை கேட்பது குறித்து கேட்கிறீர்கள், நாங்கள் இது சம்பந்தமான விவகாரத்தில் உலக அளவில் இருக்கும் விதிமுறையை பின்பற்றி வருகிறோம். இந்தியாவிலும் இந்த விதிமுறையானது வந்துவிட்டது.

எங்கே ஆரம்பித்தது?

முதலில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அவர்கள் படத்தின் பூஜையன்று பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் எங்களது அன்னக்கிளி, பத்ரகாளி உள்ளிட்ட திரைப்படங்களின் கேசட்டுகள் அவ்வளவு விற்பனையாக இருக்கின்றன. ஆனால், அதிலிருந்து எங்களுக்கு பணம் வரவில்லை. இது எங்களுக்கும் முதலில் தெரியாது.

அதன் பின்னர் என்னுடைய அண்ணன் எந்த படமானாலும், அதனுடைய இசை உரிமையை வாங்கிக் கொள்வார். இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி மேடையில் பாடுவதற்கு அவர் தடை கேட்ட நிலையில், அது குறித்து நான் அவரிடம் மிகவும் சண்டை போட்டேன். அதன் பின்னர் அவர் மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு தடை போடவில்லை.

7 கோடி ரூபாய்க்கு

நீங்கள் ஏழு கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவன் போட்ட பாட்டிற்கு கைதட்டு வராமல் எங்களது பாட்டிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா.. எங்களுடைய பெயரை போடாமல் இன்னொரு மியூசிக் டைரக்டருக்கு அவ்வளவு கோடிகள் கொடுத்தும், அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை.

அது அஜித் படம் என்றெல்லாம் சொல்கிறார்கள்; அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அது எங்களுடைய பாட்டு அவ்வளவுதான். உன்னுடைய மியூசிக் டைரக்டரால் அப்படியான இசையை கொடுக்க முடியவில்லை; எங்களுடைய பாடல்கள் தான் படத்தை ஜெயிக்க வைக்கிறது. அதற்கு நீங்கள் முன்னமே அனுமதி வாங்கி இருந்தால், நாங்கள் சந்தோஷமாக அதனை கொடுத்திருப்போம்.’ என்று பேசினார்.