தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premalu Vs Bangalore Days: ‘பிரேமலு இந்த தலைமுறையின் பெங்களூர் டேஸ்’: இளமை ததும்பும் இரண்டு படங்களின் ஒப்பீடு!

Premalu Vs Bangalore Days: ‘பிரேமலு இந்த தலைமுறையின் பெங்களூர் டேஸ்’: இளமை ததும்பும் இரண்டு படங்களின் ஒப்பீடு!

Marimuthu M HT Tamil
Apr 13, 2024 05:51 PM IST

Premalu Vs Bangalore Days: மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்துக்கும், பத்தாண்டுகளுக்கு முன் வெளியான பெங்களூர் டேய்ஸ் படத்துக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளை வரைகிறது, இக்கட்டுரை

பிரேமலு மற்றும் பெங்களூர் டேஸ் திரைப்படம் ஓர் ஒப்பீடு
பிரேமலு மற்றும் பெங்களூர் டேஸ் திரைப்படம் ஓர் ஒப்பீடு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த கேரள மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதுபோல் பெங்களூர் டேஸ் திரைப்படம் இருந்தது.  குறிப்பாக நிவின் பாலி நடித்திருந்த குட்டன் கதாபாத்திரம் சொந்த ஊர் மீது மிகுந்த அபிப்ராயமும், அதே நேரம் பணம் சம்பாதிப்பதற்காக பெங்களூரில் வசிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருக்கும். மேலும்,நஸ்ரியா நடித்த குஞ்சு என்னும் கதாபாத்திரமும், துல்கர் சல்மான் நடித்த அஜூ என்னும் கதாபாத்திரமும் மிகுந்த சுதந்திர உணர்வுடன் இருக்கவேண்டும் என்ற நிலையில் இத்திரைப்படத்தில் காட்டப்படுகின்றனர். 

இந்நிலையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு, பெங்களூரு டேஸ் போன்ற சாயலில் வெளியான திரைப்படம்தான், பிரேமலு. மலையாள இயக்குநர் கிரிஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் நஸ்லேன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜூ, பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான், பிரேமலு. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவிலும் ரிலீஸாகி இதுவரை ரூ.132 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படம், ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. 

பெங்களூர் டேஸ், பிரேமலு இந்த இரண்டு படங்களிலும், நகைச்சுவை, ஃபீல் குட் பாணி ஆகியவை ஒத்து இருந்தது. பெங்களூர் டேஸில் கதைக்களம், பெங்களூருவை மையப்படுத்தியிருந்த நிலையில், பிரேமலு திரைப்படத்தில் ஹைதராபாத்தில் புலம்பெயர்ந்த  இளம்மலையாளிகளின் வாழ்க்கை அனுபவத்தைப் படம் சொல்கிறது. சுருக்கமாக, சொல்லப்போனால், பிரேமலு இந்த தலைமுறையின் பெங்களூரு டேஸ். 

என்ன வித்தியாசம்:

நஸ்லேனின் சச்சின் கதாபாத்திரமும் மற்றும் மமிதா நடித்த ரீனு கதாபாத்திரமும் பிரேமலுவில் தங்கள் தொழில் மற்றும் காதல் வாழ்க்கைக்கு வரும்போது கரடுமுரடாக இருக்கிறார்கள். ஆனால் பெங்களூர் டேஸ் திரைப்படத்தில், குட்டன், குஞ்சு மற்றும் அஜூ மிக ஜாலியாகவே படம் நெடுக இருக்கின்றனர். 

உதாரணமாக, ரீனு கேரள மாநிலம், பத்தனம்திட்டாவிலிருந்து ஹைதராபாத் செல்ல விரும்புகையில் அந்நியரை திருமணம் செய்துதான் போகவேண்டும் என்று இல்லை. அவளுக்கு நல்ல சம்பளம் தரும் வேலை இருந்தால் கூட போகலாம். ஆனால், ரீனு போகிறார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தில், ஷிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் பாசிலுடன் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இணைந்த குஞ்சு நஸ்ரியாவை விட, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஆர்ஜே சாரா கதாபாத்திரத்தில் நடித்த பார்வதி திருவோத்துவிடம் காதலில் விழும் அஜூவின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. 

பிரேமலு திரைப்படத்தில், சச்சின் கதாபாத்திரம், உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு குடிபெயற விரும்புகிறார். ஆனால் அதைச் செய்ய அவரிடம் நிதி இல்லை. தொடர்ந்து சண்டையிடும் பெற்றோரிடமிருந்து தப்பிக்க அவர் ஹைதராபாத் செல்கிறார். அந்த வகையில், அவர் உடைந்த குடும்பத்திலிருந்து வரும் அஜுவைப் போன்றவர். அஜு உணர்ச்சிவசப்பட்டு, தனது பெற்றோரைப் பற்றி பேசும்போது, சூழ்நிலைகள் தன் கைகளை மீறி விட்டன என்பதை சச்சின் ஏற்றுக்கொள்கிறார். எதுவாக இருந்தாலும் சச்சின் வாழ்க்கையில் ரீனு மூலம் தென்றல் வீசுகிறது. பெங்களூரு டேஸ் திரைப்படத்தில், பைக் பந்தய தடைக்குப் பிறகு அஜு நம்பிக்கையைப் பெற போராடுகிறார்.

இயக்கத்தைப் பொறுத்தவரை கூட, இயக்குநர் அஞ்சலி மேனன் தனது கதாபாத்திரங்களை இறுதியில் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார். மறுபுறம், ரீனுவின் வருங்கால பார்ட்னர் எனக்கூறப்படும் ஆதி துரத்தும் காட்சியில் கூட, பிரேமலு இயக்குநர் கிரிஷ் நகைச்சுவையைத் தேர்வு செய்கிறார். ஆதி இதுவரை இல்லாத மிகவும் எரிச்சலூட்டும் கற்பனை கதாபாத்திரமாக இருக்கலாம். ஆனால், அவர் வேடிக்கையானவர் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. உலகின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, நமக்கு முதிர்ச்சியை விட நகைச்சுவை அதிகம் தேவைப்படலாம்.

நட்பு வெளிப்படும் விதம்:

காதல் மற்றும் நட்பினை வெளிப்படுத்தும் விதத்தில் பிரேமலு நன்றாகவே இருக்கிறது. ஏனென்றால் பெங்களூர் டேஸ், திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் தொடர்புபடுத்தக்கூடியவை. வசனங்கள் குறிப்பாக ஒரு அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. குட்டன், குஞ்சு மற்றும் அஜு ஆகியோர் ஒருவருக்கொருவர் மன உளைச்சலைத் தணிக்கும் போது, புலம்புகின்றனர். இப்படத்தில் சச்சின், ரீனுவிடம் ஒரு தலைக் காதலில் தவிக்கும்போது, இந்த புலம்பலை உணர்வீர்கள்.  

மேலும் பிரேமலு திரைப்படத்தில் அமுல், ஷோபி சர்,சச்சின் ஆகிய மூவரும் படத்தில் நட்பினைப் பறைசாற்றுகின்றனர். சச்சினுக்கு, இவர்கள் பக்கபலமாக உள்ளனர். பெங்களூர் டேஸ் திரைப்படத்தில், குட்டன், குஞ்சு மற்றும் அஜு ஆகியோர் உறவினர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாவற்றையும் விட நண்பர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது திரைப்படம்,

அஜூ, குஞ்சு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். அது அவளுடைய உணர்ச்சியற்ற கணவனை எதிர்த்து நிற்பதாக இருந்தாலும் கூட. இவ்வாறு இப்படத்தில் நட்பு பேசப்பட்டுள்ளது. 

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, மலையாள சினிமா புதிய புதிய கண்டெண்ட்களுடன் வந்தது. பல பரிசோதனை முயற்சி நடந்தது. புதிய நடிகர்கள் வரத்தொடங்கினர். 

மோகன்லால், மம்முட்டி போன்ற நட்சத்திரங்கள் கூட, 2010க்குப் பின் வந்த புதிய மலையாள இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். 

கோவிட் 19 தொற்று பெருங்காலம், வீட்டில் முடங்கியிருந்த தமிழ் மற்றும், தென்னிந்திய மொழிபேசும் பிற மாநிலத்தவர்களையும் மலையாளப் படத்தை சப்-டைட்டிலின் துணைகொண்டு பார்க்க வைத்தது. அப்போது, முற்றிலும் ஐபோனில் படமாக்கப்பட்ட ‘சி யூ சூன்’ திரைப்படத்தைப் பார்த்தனர். மேலும், பெண்களைப் பலர் நடத்தும் விதத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தோலுரித்தது. அதன் வீச்சு தற்போது வரை தொடர்கிறது. 

சமீபத்தில் தமிழ்நாட்டில் மஞ்ஞுமல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம் ஆகியப் படங்களை நேரடியாக மலையாளத்தில் தமிழ்நாட்டு மக்கள் பார்த்து ரசித்தனர். 

இந்நிலையில் பிரேமலு படத்தில் ஓடிடி ரிலீஸ், இன்னும் மலையாள சினிமாவை அதிகபட்ச சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். 

பெங்களூர் டேஸ் படம் மூலம் பெங்களூரின் அழகை ரசித்த ரசிகர்கள், பிரேமலு படம் மூலம் ஹைதராபாத்தின் அழகை ரசிக்கலாம். இது குளிர்ச்சியான புதிய நகரம் போல் தெரிகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்