தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Premalu Malayalam Movie Box Office Collection Crossed 50 Crore Rupees

Premalu Collection: ரூ.5 கோடி செலவு.. ரூ.50 கோடி லாபம் பார்த்த மலையாள படம்.. மாஸாக வசூல் செய்த பிரேமலு!

Aarthi Balaji HT Tamil
Feb 26, 2024 11:27 AM IST

மலையாள ரோம் - காம் படமான பிரேமலு பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது.

பிரேமலு
பிரேமலு

ட்ரெண்டிங் செய்திகள்

தண்ணீர் மாத்தன் தினங்கள் மற்றும் சூப்பர் சரண்யா போன்ற வெற்றி படங்களை இயக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் தான் கிரீஷ் ஏ.டி. இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்து உள்ளர் இயக்குநர் கிரீஷ். ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. உலகளாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.51.9 கோடியைத் தாண்டி உள்ளது.

நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் ஆகும்.

இப்படம் பல இளைஞர்களின் மனதை கட்டி இழுதுள்ளது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை நமக்கு தருகிறது.

எளிமையான அதே சமயம் வசீகரிக்கும் கதை களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.

தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது. இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதே சமயம் அழகையும் அப்பாவித்தனத்தையும் கொண்டு உள்ளது.

சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸின் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரீஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் உருவாகி இயக்கும் இந்த பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது. உண்மையில், இந்தப் படம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும், இது "பிரேமம்" மற்றும் "லவ் டுடே" போன்ற சிறந்த ரோம்-காம் படங்களுக்கு போட்டியாக உள்ளது.

கூடுதலாக, மொழித் தடைகள் இல்லாத இத்திரைப்படத்தின் உலகளாவிய ஈர்ப்பு, கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் பரவலான வசூலில் பங்களிதுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. பிரேமலு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மட்டுமல்லாமல், மலையாள சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் ஆக மாறி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா பயணமாக இப்படம் மாறி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்