மலையாள ஓடிடி.. பிரேமலு ஹீரோ நடித்த ஐ ஆம் காதலன்.. ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எனத் தகவல்
-மலையாள ஓடிடி.. பிரேமலு ஹீரோ நடித்த ஐ ஆம் காதலன்.. ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள ஓடிடி: கொரோனா லாக் டவுன் காலத்தில் தமிழ் மக்கள் நிறைய பேர் மலையாள சினிமாக்களை ஓடிடி தளத்தில் பார்க்கத் தொடங்கினர். முன்பே பலர் பார்த்துக்கொண்டிருந்தாலும், கொரோனாவுக்குப் பின் இதன் ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றே கூறலாம்.
பிரேமலு என்னும் தமிழ் டப்பிங் படத்தின் மூலம் ஹீரோவாக தனது முதல் பிளாக்பஸ்டர் படத்தைத் தந்தவர், இளம் நடிகர் நஸ்லீன். காதல், வாழ்க்கை குறித்த தெளிவு இல்லாத இளைஞனாக இன்றைய இளைஞர்களின் மனதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் இளம் நடிகர் நஸ்லீன் நடிப்பில் மிரட்டியிருப்பார்.
பிரேமலு படத்தில் நஸ்லீன் மற்றும் மமிதா பைஜுவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெறும் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான பிரேமலு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. பிரேமலு படத்தை கிரிஷ் ஏ.டி. இயக்கியிருந்தார்.
சைபர் கிரைம் த்ரில்லர்:
பிரேமலு படத்திற்குப் பிறகு, இளம் நாயகன் நஸ்லீனும், இயக்குநர் கிரிஷ் ஏ.டி.யும் இணைந்து உருவாக்கி இருக்கும் ‘ஐ ஆம் காதலன்’. சைபர் கிரைம் த்ரில்லர் படத்தில் காதல் கதையைச் சேர்க்கும் வகையில், அனிஷ்மா அனில் குமார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
’பிரேமலு’ திரைப்படம் ஏற்படுத்திய வெற்றியின் காரணமாக இந்த சிறிய படம் ரிலீஸுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கேரளாவில் ஏற்படுத்தியது. ஆனால், வழக்கமான கான்செப்ட் காரணமாக ’ஐ ஆம் காதலனுக்கு’ எதிர்பார்த்த அளவு வசூல்ரீதியிலான வெற்றி கிடைக்கவில்லை. சைபர் கிரைம் பின்னணியில் உள்ள திருப்பங்களும், இளம் நடிகர் நஸ்லீனின் கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவர்ந்தன.
டிசம்பர் மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ்:
இந்நிலையில் ’ஐ ஆம் காதலன்’ திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது. அதில் மலையாளப் பதிப்பு மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது. விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ ஆம் காதலன் படத்தின் கதை என்ன?
ஐ ஆம் காதலன் கதைப்படி, விஷ்ணு (நஸ்லீன்) இன்ஜினியரிங் முடித்துவிட்டார். பல பின்னடைவுகள் இருப்பதால் வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. அவர் தனது கல்லூரி நாட்களில் இருந்தே ஷில்பாவை (அனீஷ்மா) நேசிக்கிறார். ஷில்பா தனது தந்தையின் நிதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறாள். விஷ்ணு ஹேக்கிங் செய்வதில் வல்லவர். ஷில்பாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பிடிபடுகிறது.
அதே நேரத்தில், விஷ்ணுவின் தந்தை சிட்ஃபண்ட் நிறுவனத்தில் பணத்தால் ஏமாற்றப்படுகிறார். அவர் ஒரு மோசடியாளன் என்று முத்திரை குத்தப்படுவதால் அவர் நிறைய அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
விஷ்ணு தனது ஹேக்கிங் திறமையைப் பயன்படுத்தி தனது தந்தை சிட்பண்ட் நிறுவனத்திடமிருந்து இழந்த பணத்தை எவ்வாறு பெற்றார்? விஷ்ணு தனது ஹேக்கிங் திறமையைப் பயன்படுத்தி தனது தந்தை சிட்ஃபண்ட் நிறுவனத்திடமிருந்து இழந்த பணத்தை எவ்வாறு பெற்றார்? வேலை கிடைத்து ஷில்பாவின் காதலை எப்படி பெற்றார் என்பதுதான் படத்தின் கதை.
டாபிக்ஸ்