Premalatha Vijayakanth: கோட் படத்திற்கு வந்த சிக்கல்.. கேப்டன் உருவத்தை பயன்படுத்தா வேண்டாம் - பிரேமலதா காட்டம்
Premalatha Vijayakanth: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா தெரிவித்து உள்ளார்.
Premalatha Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் பிரிவால் தமிழகமே வேதனையில் உள்ளது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் கடைசி நிமிடத்தில் கூட எப்படியாவது மீண்டும் உயிர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் 2023 ஆம் ஆண்டு கடைசி மாதம், கடைசி வாரத்தில் நம்மை வீட்டு பிரிந்து சென்றார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் கொடுத்த அனுப்புகை, அவர் எவ்வளவு பிரபலமான நபர் என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்தது.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் ( AI TECHNOLOGY ) தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கோட் படத்தில் விஜயகாந்த்
தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை சுமார் 10 நிமிட காட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தின் ( AI TECHNOLOGY ) மூலம் படக்குழு பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்திலும் ஏஐ ( AI TECHNOLOGY ) தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த போவதாக சொல்லப்படுகிறது.
பிரேமலதா காட்டம்
இந்நிலையில் ஏஐ ( AI TECHNOLOGY ) தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் ( AI TECHNOLOGY ) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
தவிர்த்துக் கொள்ள வேண்டும்
குறிப்பாக இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இது வரை அனுமதி கேட்கவில்லை
எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் ( AI TECHNOLOGY ) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இது வரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.’’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்