தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Premalath Latest Interview Thanks To Those Who Did Not Come To The Vijayakanth Memorial

Premalatha Vijaykanth: அஜித் முதல் வடிவேலு வரை.. விஜயகாந்த் நினைவேந்தலுக்கு வராத பிரபலங்கள்- பிரேமலதா வீடியோவில் பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2024 06:48 PM IST

தன்னுடைய திரைப்படங்களின் மூலமும் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இன்றைக்கு நம்முடன் கேப்டன் இல்லை என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அவருடைய ஆன்மா நம்முடன் தான் இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்!
பிரேமலதா விஜயகாந்த்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதிலும் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் வடிவேலு மற்றும் அஜித்குமார் கடைசி வரை வரவே இல்லை. இந்த நிலையில் நினைவேந்தலுக்கு வராதவர்களுக்கு அவரது மனைவி பிரேமலதா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 

அதில் அவர் பேசும் போது,  “என்னுடைய கணவர் விஜயகாந்தின் நினைவேந்தலுக்கு  வந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. தன்னுடைய வாழ்க்கையின் எல்லா காலக்கட்டத்திலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றதோடு, அனைவரையும் சமமாக நடத்தும் பண்பாலும், அன்புள்ளம் கொண்டு உதவும் குணத்தாலும், மக்களின் உள்ளத்தில் நீங்கா இடத்தை பிடித்தவர் விஜயகாந்த் 

தன்னுடைய திரைப்படங்களின் மூலமும் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இன்றைக்கு நம்முடன் கேப்டன் இல்லை என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அவருடைய ஆன்மா நம்முடன் தான் இருக்கிறது. 

கேப்டனின் இறுதி பயணத்தில் வந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று வர முடியாதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு, வீட்டிற்கும் வந்தீர்கள்.

உங்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக விஜயகாந்தின் இறுதி பயணத்தில் பங்கேற்க முடியாத சூழலில் சிக்கி கொண்டவர்களின் எண்ணமும் கேப்டனிடத்தில் இருந்திருக்கும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை.  இறுதி பயணத்தில் எங்களுடன் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

கேப்டன் இருக்கும் பொழுது சில உதவிகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். இனிமேல் அது கிடைக்குமா என்ற கேள்வி உங்களுக்கு எழ வாய்ப்பிருக்கிறது. 

நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எப்போதும் போல கேப்டனிடம் உதவி கேட்கும் வகையில், எங்கள் இல்லம் தேடி வந்து உதவி கேட்கலாம். எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் நாங்கள் உங்களுக்குச் செய்வோம்” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.