பாலிவுட் சென்ற தமிழ் பொண்ணு..டான்ஸ்தான் எனது அடையாளம்! கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி..ப்ரீத்தி முகுந்தன் ஷேரிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலிவுட் சென்ற தமிழ் பொண்ணு..டான்ஸ்தான் எனது அடையாளம்! கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி..ப்ரீத்தி முகுந்தன் ஷேரிங்

பாலிவுட் சென்ற தமிழ் பொண்ணு..டான்ஸ்தான் எனது அடையாளம்! கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி..ப்ரீத்தி முகுந்தன் ஷேரிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 03, 2024 10:00 AM IST

கண்ணப்பா படத்துக்காக கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். டான்ஸ்தான் எனது அடையாளம். அதன் மூலமாதான் பாலிவுட் வரை சென்றுள்ளேன் என்று நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியுள்ளார்.

பாலிவுட் சென்ற தமிழ் பொண்ணு..டான்ஸ்தான் எனது அடையாளம்! கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி - ப்ரீத்தி முகுந்தன் ஷேரிங்
பாலிவுட் சென்ற தமிழ் பொண்ணு..டான்ஸ்தான் எனது அடையாளம்! கத்தி சண்டை, குதிரை ஏற்றம் பயிற்சி - ப்ரீத்தி முகுந்தன் ஷேரிங்

இதையடுத்து ப்ரீத்தி முகுந்தன் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். பாலிவுட்டில் பிரபலமான ராப் பாடகரான பாட்ஷாவுடன் இணைந்து மோர்னி என்ற மியூசிக் விடியோவுக்கு நடனமாடியுள்ளார் ப்ரீத்தி.

டான்ஸ்தான் எனது அடையாளம்

பாலிவுட் வருகை பற்றி பேசியிருக்கும் ப்ரீத்தி முகுந்தன், "நான் திருச்சி பெண். டான்ஸ்தான் எனது அடையாளமாக இருக்கிறது. நான் வளர்ந்து வரும் போதே ஏராளான கலைநிகழ்ச்சிகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். எனவே நான் இப்போது அதில் ஒருவராக அங்கம் வகிப்பது கனவு மெய்பித்திருப்பதாக உணர்கிறேன்.

ஆசை கூட பாடல் பெரிய அளவில் ரீச் ஆனது சர்ப்ரைஸ் ஆன விஷயம் தான். பாடலின் படப்பிடிப்பின்போது இதை எதிர்பார்க்கவில்லை. தற்போது பாடல் மிகப்பெரியதாக பாலிவுட் வரை என்னை அழைத்து வந்திருப்பது நம்பமுடியாததாக இருக்கிறது" என்றார். 

வாழ்க்கையின் சிறந்த தருணம்

தொடர்ந்து பேசிய அவர், "மோர்னி பாடலுக்காக பாட்ஷாவுடன் இணைந்தது உற்சாகமாக இருந்தது, ஏனெனில் அவர் எவ்வளவு புகழ்பெற்ற என்பது அனைவருக்கும் தெரியும். அவரது வைப் புதியதாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.

இந்த பாடல் வெளியானதில் இருந்தே ரெஸ்பான்ஸ் அருமையாக உள்ளது, மேலும் ரசிகர்கள் பாடலுடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதை உணர்கிறேன். இது என் வாழ்வின் சிறந்த தருணமாக உள்ளது.

2024 எனக்கு சிறப்பாக ஆண்டாக அமைந்துள்ளது. என் வாழ்க்கையில் நான் பல வழிகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளேன். எனது ப்ரோபோஷனல் வாழ்க்கையின் தொடக்கத்தில் அதிக ஆர்வமுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறினார்.

கத்தி சண்டை, குதிரையேற்ற பயிற்சி

தெலுங்கில் உருவாகி வரும் கோணப்பா படத்தில் நடிப்பது பற்றி ப்ரீத்தி முகுந்தன் கூறியதாவது, "மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கும் விஷ்ணு மஞ்சுவின் கனவு படமான கண்ணப்பா படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படத்துக்காக குதிரையேற்றம், கத்தி சண்டை பயிற்சி மேற்கொண்டேன். இந்த காவிய கதையின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. இப்போதைக்கு இந்த படம் பற்றி இவ்வளவு தான் கூற முடியும்.

2025 ஆம் ஆண்டில், எனது திறமையைும் மேலும் வளர்ச்ச கேரியரில் முன் நோக்கி செல்ல விரும்புகிறேன். எனவே சவால் மிக்க பல புதிய பாத்திரங்களில் என்னை ஈடுபடுத்துவேன். இன்னும் அறிவிக்கப்படாத சில அருமையான படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு அவை சர்ப்ரைஸாக இருக்கும்" என்றார்.

ப்ரீத்தி முகுந்தன் படங்கள்

சோஷியல் மீடியாக்களில் டான்ஸிங் குயின் ஆக வலம் வந்த ப்ரீத்தி முகுந்தன் தமிழில் ஸ்டார் படம் அறிமுகமானபோதிலும், அதற்கு முன்னர் அவர் நடித்த தெலுங்கு படமான ஓம் பீம் புஷ் என்ற படம் வெளியானது. தற்போது பான் இந்தியா படமாக தெலுங்கில் உருவாகும் கண்ணப்பா படத்தில் நடித்து வருவதோடு, மைனே பியார் கியா என்ற படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.