RIP A Praveen Kumar: மனசாட்சியே இல்லாமல் உயிரை பறித்த மஞ்சள் காமாலை; மேதகு மியூசிக் டைரக்டர் மரணம்!-கதறும் மன்னை சாதிக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip A Praveen Kumar: மனசாட்சியே இல்லாமல் உயிரை பறித்த மஞ்சள் காமாலை; மேதகு மியூசிக் டைரக்டர் மரணம்!-கதறும் மன்னை சாதிக்

RIP A Praveen Kumar: மனசாட்சியே இல்லாமல் உயிரை பறித்த மஞ்சள் காமாலை; மேதகு மியூசிக் டைரக்டர் மரணம்!-கதறும் மன்னை சாதிக்

Kalyani Pandiyan S HT Tamil
May 02, 2024 12:09 PM IST

மேதகு, இராக்கதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரவீன் குமார் காலமானார். மஞ்சள் காமலை தொற்று காரணமாக அவர் இறந்ததாக அவரின் நண்பர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேதகு, இராக்கதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரவீன் குமார் காலமானார்
மேதகு, இராக்கதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரவீன் குமார் காலமானார்

இவருக்கு மஞ்சள்காமாலை தொற்று இருந்த நிலையில் அதனை சரிவர கவனிக்காததால் மஞ்சள்காமாலை நோய் தீவிரம் அடைந்து இன்று தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலமானார். முன்னதாக இதனை அவரது நண்பர் மன்னன் சாதிக் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்த வீடியோவில் பேசி இருந்தார். 

முன்னதாக, இது தொடர்பாக மன்னை சாதிக் வெளியிட்ட வீடியோவில், “மேதகு, இராக்கதன்  உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பிரவீன் பணியாற்றி இருக்கிறான். தற்போதும் ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் சூழ்நிலை என்னவென்றால் அவனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததை அவன் கவனிக்க வில்லை. 

அது தெரியாமலேயே அவன் இருந்திருக்கிறான். அவனை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவன் கள்ளம், கபடம் இல்லாதவன். 

எந்த ஒரு தவறும் செய்யாதவன். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக தலையிடாதவன். அவனுக்கு இப்படி ஒன்று நடந்தது என்று ஒன்றை கேள்விப்பட்ட உடனேயே, நான் கிளம்பி விட்டேன். ஆனாலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. 

அவசர சிகிச்சை பிரிவில் நான் சென்று அவரை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் நான் சென்று கொண்டிருக்கிறேன். தயவுசெய்து உங்கள் உடலை நன்றாக சோதனை செய்து கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால், நம் உடலுக்குள்ளே என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியாது. நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொண்டாலே, உங்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.” என்று பேசி இருந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.