நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு..தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் அந்தகன்! வேறு எந்த படங்கள் ரிலீஸ்
OTT Crime Thriller: நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு கிடைக்கும் விதமாக பிரசாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் க்ரைம் திரில்லர் படமான அந்தகன் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக வேறு எந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்

90ஸ்களில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்ற ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரசாந்த் ஹீரோவாக நடித்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியான படம் அந்தகன். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் நீண்ட காலமாக தள்ளி போன நிலையில் தற்போது ஒரு வழியாக தீபாவளி ஸ்பெஷலாக ஸ்டிரீம் ஆக உள்ளது.
அந்தகன் ஓடிடி ரிலீஸ்
பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக கடந்த ஆகஸ்ட் 9ஆம் வெளியாகியிருக்கும் அந்தகன் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. செப்டம்பர் மாதம் வெளியான படங்கள் கூட ஓடிடியில் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் அமேசான் ப்ரைம் விடியோவில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் தீபாவளி ஸ்பெஷலாக ஸ்டிரீம் ஆக இருக்கிறது.
அத்துடன் படத்தை வெளிநாட்டு ரசிகர்கள் ரசிக்கும் விதமாக ஆஸ்ட்ரோ டிவியில் உள்ள விண்மீண் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. ஒரே நாளில் இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் படம் வெளியிடப்படுகிறது.