Prasanth Marriage: 51 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான பிரசாந்த் - பெண் யாராக இருக்கும்?
Prasanth Marriage: 51 வயதாகும் பிரசாந்திற்கு திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை முடிவு செய்து உள்ளார். இந்த முறையும் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.

1980 களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தியாகராஜனின் மகன் தான் பிரசாந்த். சாக்லேட் பாய், மிஸ்டர் ஹேண்ட்சம் என பெயர் பெற்ற அரவிந்த் சாமி, மாதவன் ஆகியோருக்க இடையே அந்த பட்டத்துக்கு சொந்தகாரராக இவர் இருந்து வந்துள்ளார்.
பிட்னஸ் ப்ரீக்
வெள்ளித்திரையில் இவரது பெயர் டாப் ஸ்டார் என்ற அடைமொழியுடனே தோன்றும். அந்த படத்துக்கு ஏற்றார் போல் வெறும் நடிகனாக மட்டுமில்லாமல் சண்டை, நடனம், ப்யானோ இசைக்கருவி, மல்டிமீடியா போன்ற பல்வேறு வித்தைகளை கற்று தேர்ந்த நடிகராக தன்னை அடையாளப்படுத்தியவர் பிரசாந்த். 90ஸ் ஹீரோக்களில் பிட்னஸ் ப்ரீக்காக இருந்து வந்த பிரசாந்த் அந்த விஷயத்தாலே தன்னை மற்ற ஹீரோக்களிடமிருந்து வித்தியாசபடுத்தி காட்டினார்.
அப்பாவால் தான் சினிமா
1990 இல் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படம் தான் பிரசாந்தின் முதல் படம். 17 வயதில் ஹீரோவான அறிமுகமான அவரது வாழ்க்கையின் லட்சியம் டாக்டராக ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் இவர் நடிக்க வந்தது விபத்தாக இருந்தாலும், சினிமாவில் நல்ல நிலையில் வந்தபோதும் தற்பெருமை பேசாமல், அப்பாவால் தான் சினிமாவுக்கு வந்தேன் என பெருந்தன்மையாக பல மேடைகளில் பேசியுள்ளார் பிரசாந்த்.