Prakash Raj: ஜோக்கர்களின் கடைசி ஆயுதம்.. மத விழாவில் கூட பொய் - கும்பமேளா புனித நீராடல்.. பிரகாஷ் ராஜ் புகார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prakash Raj: ஜோக்கர்களின் கடைசி ஆயுதம்.. மத விழாவில் கூட பொய் - கும்பமேளா புனித நீராடல்.. பிரகாஷ் ராஜ் புகார்

Prakash Raj: ஜோக்கர்களின் கடைசி ஆயுதம்.. மத விழாவில் கூட பொய் - கும்பமேளா புனித நீராடல்.. பிரகாஷ் ராஜ் புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2025 06:01 PM IST

Prakash Raj Complaint: கடைசி முயற்சியாக அவர்கள் மதத்தின் புனித விழாவில் கூட பொய் பரப்புகிறார்கள். ஜோக்கர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என கும்பமேளாவில் புனித நீராடுவதுபோல் உலா வரும் புகைப்படத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோக்கர்களின் கடைசி ஆயுதம்.. மத விழாவில் கூட பொய் - கும்பமேளா புனித நீராடல்.. பிரகாஷ் ராஜ் புகார்
ஜோக்கர்களின் கடைசி ஆயுதம்.. மத விழாவில் கூட பொய் - கும்பமேளா புனித நீராடல்.. பிரகாஷ் ராஜ் புகார்

இதையடுத்து நாத்திகவாதியாக தன்னை வெளிப்படுத்தி கொள்ளும் நடிகர் பிரகாஷ் ராஜ், கும்பளமேள சென்று புனித நீராடலில் ஈடுபட்டுள்ளதாக பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அத்துடன் இந்த புகைப்பட்ததை வைத்து பலரும் பிரகாஷ் ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு, கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு மீம்களும் பகிரப்பட்டு வருகிறது.

பிரகாஷ் ராஜ் புகார்

இந்த வைரல் புகைப்படம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, கும்பமேளாவில் தான் புனித நீராடுவது போல் உலா வரும் புகைப்படமும், அதுதொடர்பான செய்தியும் போலியானது என கூறியுள்ளார்.

அத்துடன் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " மதவெறியர்கள் மற்றும் கோழை படையியன் கடைசி முயற்சியாக, அவர்களின் புனித விழாவின் போது கூட பொய் செய்து பரப்புவதாக உள்ளது. என்ன ஒரு அவமானகரமான செயல். ஜோக்கர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கும்பமேளா நிகழ்வில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடலில் ஈடுபவதுபோல் இருக்கும் இந்த புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த மாதிரியான கருத்தை முன் வைக்க உள்ளது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கும்பமேளாவில் பிரபலங்கள் புனித நீராடல்

உத்தரபிரதேசம் மாநிலம் பிராயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வு, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வாக உள்ளது. இந்த நிகழ்வுக்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதேபோல் அரசிய், சினிமா பிரபலங்கள் பலரும் கும்பமேளா நிகழ்வுக்கு சென்று புனித நீராடி வருகிறார்கள். பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா போன்ற படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் மற்றும் அவரது மனைவி அங்கிதா கோன்வார் என பலரும் புனித நீராடலில் ஈடுபட்ட நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கும்பமேளாவில் தனது மனைவி அங்கித் கோன்வாருடன் புனித நீராடிய நடிகர் மலிந்த் சோமன் (இடது), புனித நீராடலில் நடிகை பூனம் பாண்டே
கும்பமேளாவில் தனது மனைவி அங்கித் கோன்வாருடன் புனித நீராடிய நடிகர் மலிந்த் சோமன் (இடது), புனித நீராடலில் நடிகை பூனம் பாண்டே

பிரகாஷ் ராஜ் புதிய படங்கள்

கடந்த 1990களில் இருந்து தென்னிந்திய சினிமாக்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் இந்த ஆண்டில் சூர்யாவின் ரெட்ரோ, தளபதி விஜய்யின் ஜனநாயகன், மிராக்கிள், அக்னி சிறகுகள் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதுதவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவரது படங்கள் வர இருக்கின்றன.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.