தீபாவளி ரேசில் 100 கோடி நாயகன்.. இளசுகளே டார்கெட்.. பிரதீப்பின் புதுப்பட டைட்டில் இங்கே! -ரிலீஸ் எப்போ?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தீபாவளி ரேசில் 100 கோடி நாயகன்.. இளசுகளே டார்கெட்.. பிரதீப்பின் புதுப்பட டைட்டில் இங்கே! -ரிலீஸ் எப்போ?

தீபாவளி ரேசில் 100 கோடி நாயகன்.. இளசுகளே டார்கெட்.. பிரதீப்பின் புதுப்பட டைட்டில் இங்கே! -ரிலீஸ் எப்போ?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 04:29 PM IST

படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்தது.

தீபாவளி ரேசில் 100 கோடி நாயகன்.. இளசுகளே டார்க்கெட்.. பிரதீப்பின் புதுப்பட டைட்டில் இங்கே! -
தீபாவளி ரேசில் 100 கோடி நாயகன்.. இளசுகளே டார்க்கெட்.. பிரதீப்பின் புதுப்பட டைட்டில் இங்கே! -

ஹாட்ரிக் ஹிட்

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அந்தப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து இயக்குநரோடு சேர்த்து நடிகராகவும் பிரதீப் களமிறங்கிய திரைப்படம்தான் லவ் டுடே.

இந்தப்படமும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான டிராகன் படமும் பெரிய வெற்றிப்பெற்று 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார்

இப்படி தொடர் வெற்றிகளுக்கு சொந்தக்காரரான பிரதீப் பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்தது. அதன் படி, படத்திற்கு இளைஞர்களைக் கவரும்படி 'Dude' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

புதிய போஸ்டர்
புதிய போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக்கில், முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், திரைப்படம் இந்த வருடம் 2025 தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.