Pradeep Ranganathan: யுவன் ஒரு ஃபிராடு… வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பதிவுகள்
யுவன் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பழைய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். ஏஜிஇதுவரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு யுவன் இசை மிக முக்கிய பங்காக அமைந்து இருக்கிறது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டுள்ள பழைய டுவிட்டுகளை நெட்டிசன்கள் தேடி எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு “யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், ஃபிராடு” என ஒருபதிவை போட்டுள்ளார். அதேபோல் 2012 ஆம் ஆண்டு போட்டுள்ள ஒரு பதிவில் யுவன் மங்காத்தா பட தீம் மியூசிக்கை காப்பி அடித்துள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

டாபிக்ஸ்