Dragon Movie: போன தடவை மிஸ் ஆச்சு.. இந்த தடவை விடாமல் நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்த நடிகர்
Dragon Movie: காதலர் தினத்தில் வெளியாக இருக்கும் ட்ராகன் படத்தில் ப்ரதீப் ரங்கநாதன் - கயாடு லோஹர் ஆகியோரின் காதல் காட்சிகளுடன் கூடிய ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் உடனடியாக கவர்ந்த வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநராக ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இவர், பின்னர் லவ் டுடே என்ற மற்றொரு ஹிட் படத்தையும் கொடுத்தார்.
யூடியூப் விடியோக்கள் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன், வாட்ஸ் அப் காதல் என்ற குறும்படம் மூலம் பிரபலமானார். தற்போது வரை 6.30 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கிறார். நடிப்பு, எடிட்டிங் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்துபவராக இருந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ட்ராகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்கும் இவர் திரைக்கதையும் எழுதி வருகிறார்.
ஹீரோயினுக்கு லிப் கிஸ்
ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரெமான்டிக் பாணியில் உருவாகி வரும் ட்ராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாத அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜார்ஜ் மரியான், விஜே சித்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் வழித்துணையே என்ற சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. படத்துக்கு லியோன் ஜேமஸ் இசையமைத்துள்ளார். லிரிக் விடியோ வந்திருக்கும் இந்த பாடலின் ஒரு சில மேக்கிங் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.
அதில், இரவு நேரத்தில் மின்ணொளியில் ஜொலிக்கும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஈபிள் டவர் அருகே சென்று அதன் அழகை பிரதீப் ரங்கநாதன் - கயாடு லோஹர் ஜோடி ரசிக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்ள லிப் கிஸ் அடிக்கிறார்கள். கண் இமைக்கும் நொடியில் இந்த காட்சி தோன்றினாலும் பாடலின் விடியோவில் கொஞ்சம் உணர்ச்சி பொங்கும் விதமாக இருக்கும் என தெரிகிறது.
அப்போ மிஸ் ஆச்சு, இந்த முறை சிக்கிகிச்சு
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் இடம்பெறும் "சாச்சிட்டாளே" என்ற பாடலில் ஹீரோயின் இவானாவை அவர் லிப் கிஸ் அடிக்க முயற்சிக்க, தனது வாயில் கைகளை வைத்து அவர் மறைப்பார். இது காட்சி படம் வெளியான சமயத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில் இவானாவை லிப் கிஸ் அடிக்காமல் மிஸ் செய்த பிரதீப் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பசக் என கிஸ் கொடுத்துள்ளார் என பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
காதலர்களுக்கு இடையிலான மகிழ்ச்சியான தருணத்தை காட்டும் விதமாக அமைந்திருக்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
கயாடு லோஹர்
அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகை கயாடு லோஹர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். கன்னடத்தில் வெளியான முகில்பேட்டை என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுமகமான இவர் மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, தெலுங்கில் அல்லூரி, மராத்தியில் ஐ பிரேம் யூ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ட்ராகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்