தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pradeep Antonys Tweet Goes Viral Before Bigg Boss Season 7 Grand Finale Airing

Bigg Boss Season 7 Grand Finale: பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்புக்கு முன் பிரதீப் ஆண்டனி போட்ட ட்வீட் - என்னவாம்?

Marimuthu M HT Tamil
Jan 14, 2024 05:20 PM IST

மாஜி பிக்பாஸ் 7 போட்டியாளர் பிரதீப் ஆண்டனி போட்ட ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் கிராண்ட் பினாலேக்கு முன், சந்தி சிரிக்க பிரதீப் ஆண்டனி போட்ட ட்வீட்
பிக்பாஸ் கிராண்ட் பினாலேக்கு முன், சந்தி சிரிக்க பிரதீப் ஆண்டனி போட்ட ட்வீட்

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஜனவரி 14ஆம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 106 நாட்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவுசெய்து, ஒவ்வொருநாளும் நடந்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர்.

இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்துவருவதால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்துவருகிறது.

இதில் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா, மணிசந்திரா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் கடுமையான போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி, சகப் பெண் போட்டியாளர்களிடம் நடந்துகொண்டவிதம் சரியில்லை என்பதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, எவிக்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய நாள் முதல் எந்தவொரு யூட்யூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்காத பிரதீப் ஆண்டனி, தற்போது கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்புக்கு முன் போட்ட எக்ஸ் தளப்பதிவு வைரல் ஆகி வருகிறது.

பிரதீப் ஆண்டனி அந்தப் பதிவில், ‘’இண்டர்வியூ கேட்டு வரும் சோசியல் மீடியா சேனல்களே, எப்படியும் நீங்க பிராண்ட்ஸ்கிட்ட எல்லாம் அமெளண்ட் வாங்கி, என்னை விற்கத்தான் போறீங்க. அதனால், வந்து வேலை இல்லாம பேசுறதுக்காக வீடியோவின் ஒரு வியூவுக்கு ஒரு ரூபாய் வைச்சு, ஒப்பந்தம் போட்டு கொடுத்தீங்கன்னா, நான் என் இந்த கேமுக்கு வர்ற தயார்'’எனத் தெரிவித்துள்ளார். மேலும், சொல்வதெல்லாம் உண்மையில் வரவேண்டியவன்டாநானு என்னும் ஹேஷ்டேக்குடன், தனது கருத்தை பிரதீப் ஆண்டனி பதிவு செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.