Pradeep Antony:வாக்கு கொடுத்ததால் அமைதியா இருக்கேன்.. பூர்ணிமா மேல் கடுப்பான பிரதீப்
பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரதீப், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, சகபோட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, கமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காரணம், இந்த விவகாரத்தில் மற்றவர்களின் கருத்தை கேட்ட கமல், பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனையடுத்து வெளியே வந்த பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கமல் பிறந்தநாள் அன்று கமலுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன பிரதீப், தீரவிசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதீப் ரெட் கார்டு விஷயத்திற்கு மாயா, பூர்ணிமா தான் காரணம் என ரசிகர்கள் கூறினர். மேலும் பிரதீப் ரெட் கார்டு வாங்கி சென்ற போது கூட அவர்கள் இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். இவை அனைத்தும் மாயா, பூர்ணிமா மேல் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பூர்ணிமா, 16 லட்சம் ரூபாய்யுடன் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியும் தான் டைட்டில் வெல்ல மாட்டோம் என தெரிந்து அவர் பணத்துடன் வெளியேறி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிரதீப் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்த அவருக்கு இது தேவை தான் என ட்விட் செய்து வருகிறார்கள். இதை பார்க்க பூர்ணிமா ரசிகர்கள், கேரக்டர் அசாசினேஷன் கேம் பிரதீப் விளையாடியதாக மறுபக்கம் சாடி வந்தனர்.
இதனால் கடுப்பான பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “ பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறு அடிக்குற கும்பல் லாம் இஷ்டத்துக்கு பேசி வாய் கெளறாதீங்க. நான் கேரக்டர் அசாசினேஷன் கேம்களை விளையாடுவதில்லை, அது என்னுடைய பாணி கிடையாது “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.