Pradeep Antony: நீங்கலாச்சு, பிக் பாஸ் ஆச்சு.. தெறித்து ஓடிய பிரதீப்
பிக் பாஸ் ஆச்சு, நீங்கலாச்சு என சொல்லிவிட்டி தெறித்து பிரதீப் ஓடிவிட்டார்.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரதீப், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, சகபோட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, கமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காரணம், இந்த விவகாரத்தில் மற்றவர்களின் கருத்தை கேட்ட கமல், பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனையடுத்து வெளியே வந்த பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
கமல் பிறந்தநாள் அன்று கமலுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன பிரதீப், தீரவிசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது.
மேலும் பிரதீப்பும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் போட்டியில் கலந்து கொள்ள தயார் என தன் முடிவை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ” பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமான என்டிமோல் சைன் ஐடியை டேக் செய்து நான் உள்ளே வரவேண்டும் என்றால், எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கு இரண்டு ரெட் கார்டுகள் வேண்டும்.
மேலும், நான் பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தின் கேப்டனாக இருக்க விரும்புகிறேன் “ என்று பதிவிட்டு இருந்தார்.
அவரின் பதிவுக்கு ஏற்ற பதில் கொடுக்காத காரணத்தினால், பிரதீப் நான் போகிறேன் என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “செரி, ஜாலி ஆ இருங்க.. இப்போ ஒரு 4-5 தயாரிப்பாளர்கள் என்ன நம்பி கதை கேக்குறாங்க. நான் IFFI GOA 2024 கெளம்புகிறேன். நான்கு Foreign படம் பார்த்து திருடி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வரேன். ஆளா விடுங்க. நீங்கலாச்சு, பிக் பாஸ் ஆச்சு போயிடு வரேன், நல்லா இருங்க “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
