Pradeep Antony: 'பரவாயில்ல பொண்ணு கொடுக்குறாங்க'.. சத்தமே இல்லாமல் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி
Pradeep Antony: பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து உள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.
Pradeep Antony: பிக் பாஸ் வீட்டில் ஸ்டார்ங் போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். அவர், பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், எல்லை மீறி கெட்ட வார்த்தை பேசி வருகிறார் உள்ளிட்ட காரணங்களால், ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
அவர் தான் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் நம்பினார்.
ஆனால் வீட்டில் விதியை மீறியதற்காக சிவப்பு அட்டை பெற்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த செய்தி பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதீப் ரெட் கார்டு விஷயத்திற்கும், கமல் பேசியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். \
நாங்கள் இருக்கிறோம்
பிரதீப் ஆண்டனி, மீது பெரிய குற்றச்சாட்டு வைத்தாலும் மக்கள் முதல் நாளிலிருந்து அவர் பக்கமே நின்றார்கள். ஒரு பதிவு வெளியீட்டால் கூட மில்லியன் பார்வையாளர்கள் அதற்கு பதில் கொடுத்து உறுதுணையாக நிற்கிறோம் என சொல்லாமல் சொன்னார்கள்.
பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம்
இந்நிலையில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து உள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.
அவர்கள் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. அதில் இரண்டு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படத்தை பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உள்ளார்.
பரவாயில்ல என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க
அதில், “ நேற்று ( ஜூன் 16) எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. #பேமிலிமேன் #எனக்கெல்லாம் நடக்குமானு நினைச்சேன், #பரவாயில்ல என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க. #90ஸ் கிட்ஸ் சோதனைகள் “ என பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப்புக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
விரைவில் வரும் அறிவிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு டைட்டில் பட்டம் கிடைக்கவில்லை என்றாலும் அவர் ஆசைப்பட்ட விஷயம் நடந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த புகழால் பிரதீப் ஆண்டனி சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விரைவில் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அவரே ஒரு முறை கூறி இருந்தார்.
பிரதீப் ஆண்டனி டாடா, திரைப்படத்தில் தனது பாத்திரத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். அங்கு அவர் துணை பாத்திரத்தில் நடித்தார். அவர் அதிதி பாலன் நடித்த 2016 தமிழ் சமூக-அரசியல் நாடகமான அருவியில் உதவி இயக்குநராகவும் பங்களித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்