Pradeep Antony: பிக் பாஸ் இல்லனா என்ன? - முதல் நபராக படத்தில் கமிட்டான பிரதீப் ஆண்டனி.. அட்வான்ஸ் தொகை மட்டும் இவ்வளவா?
Bigg Boss Pradeep: பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால் பிரதீப் ஆண்டனிக்கு அடுத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரதீப், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, சகபோட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, கமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காரணம், இந்த விவகாரத்தில் மற்றவர்களின் கருத்தை கேட்ட கமல், பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனையடுத்து வெளியே வந்த பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கமல் பிறந்தநாள் அன்று கமலுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன பிரதீப், தீரவிசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதீப் ரெட் கார்டு விஷயத்திற்கு மாயா, பூர்ணிமா தான் காரணம் என ரசிகர்கள் கூறினர். மேலும் பிரதீப் ரெட் கார்டு வாங்கி சென்ற போது கூட அவர்கள் இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். இவை அனைத்தும் மாயா, பூர்ணிமா மேல் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் அவர் தொடரவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வரவில்லை. அதே போல் பிக் பாஸ் ஃபைனல்ஸில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு வரவில்லை.
இந்நிலையில் பிரதீப் ஆண்டனு, பிக் பாஸை விட்டு வெளியேறுவதும் இயக்குநராக தனது பணியை தொடங்குவா என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனால் படம் இயக்குவதற்கு பதிலாக நடிகராக களமறிங்கி இருக்கிறார் பிரதீப் ஆண்டனி. ஆனால் புது படம் ஒன்றுக்கு கமிட்மெண்ட் கொடுத்தது தொடர்பான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவதது படம் இயக்குவதற்கு பதிலாக முதலாவதாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக படத்தின் அட்வான்ஸ் தொகை கூட வாங்கி இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், “இந்த வருஷம் நடிச்சு, கொஞ்சம் காசு சம்பாதிச்சுக்கலாம்னு அட்வான்ஸ் லாம் வாங்கிட்டேன்.. படம் பொறுமையா ஆ தான் வரும்.. எப்போ வருன்னு லாம் கேக்காதீங்க வரும் போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க அன்புக்கு நன்றி “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இதை பார்த்த பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் அவருக்கு அட்வான்ஸ் தொகை ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் முழு சம்பளம் சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 7 ஆவது சீசன் முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சிலர் சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இன்னும் படங்களில் கமிட்டாகவில்லை. ஆனால் பிரதீப் ஆண்டனி மட்டும் தான் படத்தின் கமிட்டாகி அட்வான்ஸ் கூட வாங்கிவிட்டார்.
நடிகர் பிரதீப் ஆண்டனி ஏற்கனவே கவின் நடித்த டாடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9