24 Years of Eazhaiyin Sirippil: ட்ரெண்ட் பாடல் ‘கரு கரு கருப்பாயி’! மூன்று நாயகிகளுக்கு கல்தா கொடுக்கும் பிரபுதேவா
ஏழையில் சிரிப்பில் படத்தில் வரும் கரு கரு கருப்பாயி பாடல் இன்று மட்டுமல்ல, படம் வெளியான காலகட்டத்திலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடலாகவே இருந்தது. விஜய்யின் லியா படத்தால் மீண்டும் புத்துயிர் பெற்று பலரையும் ரீல்ஸ் மூலம் ஆட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் மார்க்கெட் உச்சத்துக்கு செல்ல காரணமாக இருந்த படங்களில் ஒன்று ஏழையின் சிரிப்பில். 90 காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த கே. சுபாஷ் இந்த படத்தை இயக்கியிருப்பார். பிரபல திரைக்கதை ஆசிரியர் கலைமணி படத்துக்கு கதை, திரைக்கதை அமைத்திருப்பார்.
காதல், காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்து பொருந்திய பக்கா மசாலா படமாக ஏழையின் சிரிப்பில் படம் உருவாக்கப்பட்டிருக்கும். ரோஜா, கவுசல்யா, சுவலட்சுமி என மூன்று ஹீரோயின்கள் படத்தில் நடித்திருப்பார்கள். நாசர், விவேக், ரஞ்சித், பாண்டு, காக்கா ராதா கிருஷ்ணன், இந்து, பூவிலங்கு மோகன் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.
தனியார் பஸ் கம்பெனியில் கூலியார பணிபுரியும் பிரபுதேவா, தனியாக பேருந்து நிலையத்தில் தவிக்கும் பெண்ணுக்கு உதவி செய்கிறார். ஆனால் அந்த உதவி பெண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்த மனநலம் பாதிக்கப்படுகிறார். தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரபுதேவா காப்பாற்றுவது தான் படத்தின் மையக்கதை.