Prabhas on Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’ - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prabhas On Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’ - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி

Prabhas on Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’ - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 17, 2025 03:05 PM IST

Prabhas on Salaar: விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி

Prabhas on Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’  - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி
Prabhas on Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’ - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி

அந்த அறிக்கையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படமான ‘சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1’ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.

சலார்
சலார்

ரசிகர்களுக்கு பரிசு

இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார்.

ஒரு வருடமாக ஓடிடி ட்ரெண்டிங்கில் சலார் படம் இருப்பதை கொண்டாடும் விதமாக ஹோம்பாலே நிறுவனம் இந்த பயணத்தில் பங்கேற்ற 366 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு பிரத்யேக பரிசுகளை வழங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: -

பிரபாஸ் பேட்டி

இது குறித்து அந்த நிறுவனம் கூறும் போது, 'சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' திரைப்படத்தின் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் இந்த திரைப்படத்தை கலாச்சார நிகழ்வாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று கூறியிருக்கிறது.

வெறும் தொடக்கம்தான்

இது தொடர்பாக பிரபாஸ் பேசுகையில், '' சலார் மீதான ரசிகர்களின் காதலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜியோ ஹாட் ஸ்டாரில் 'சலார் 1' படத்தை தொடர்ந்து பாருங்கள். விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

அங்கு புராணக்கதை தொடர்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தீவிரமாக இருக்கும். கதை இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது. அடுத்த அத்தியாயம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல எல்லைகளை கடந்து செல்லும்; ஒரு மின்னல் போன்ற சினிமா அனுபவத்தை வழங்கும் '' என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.