தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad: “அப்பட்டமான காப்பி? சட்ட ரீதியா எதிர்கொள்ளவும்..” - காப்பி அடித்த கல்கி? - கதறும் ஹாலிவுட் கலைஞர்!

Kalki 2898 AD: “அப்பட்டமான காப்பி? சட்ட ரீதியா எதிர்கொள்ளவும்..” - காப்பி அடித்த கல்கி? - கதறும் ஹாலிவுட் கலைஞர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 22, 2024 04:52 PM IST

Kalki 2898 AD: அவர்கள் அது என்னுடைய படைப்பின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். குறிப்பாக கலர் பேலட்டுகள் மற்றும் வளைவு வடிவங்களில் என்னுடைய வேலையின் குறிப்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். - கதறும் ஹாலிவுட் கலைஞர்!

Kalki 2898 AD: “அப்பட்டமான காப்பி? சட்ட ரீதியா எதிர்கொள்ளவும்..” - காப்பி அடித்த கல்கி? - கதறும் ஹாலிவுட் கலைஞர்!
Kalki 2898 AD: “அப்பட்டமான காப்பி? சட்ட ரீதியா எதிர்கொள்ளவும்..” - காப்பி அடித்த கல்கி? - கதறும் ஹாலிவுட் கலைஞர்!

Kalki 2898 AD: இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. பிரபாஸ் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை வைஜேந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 

அந்த ட்ரெயிலரில் இடம் பெற்று இருந்த சில கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்டார் ட்ரெக் படத்திற்காக, தான் செய்த வேலைகளில் இருந்து திருடப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக இருப்பதாக ஹாலிவுட் கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட் ஆலிவர் பெக் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த பதிவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் இந்தியன் எக்ஸ் பிரஸ் இணையதளத்திற்கு பேசி இருக்கிறார். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.