SALAAR Part 2: ‘’நம்மளோட சிரிப்பு எதிரிகளை எரிச்சலை அடையச் செய்யணும்’’: சலார் 2 டிராப் தகவலுக்கு சிரித்த பிரபாஸ், நீல்
SALAAR Part 2: பிரசாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் இரண்டாம் பாகம்(சலார் 2) தயார் ஆவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் புதுத்தகவலை வெளியிட்டுள்ளது.

SALAAR: Part 2: பிரசாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’சலார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், சலார் 2 படத்தின் தயாரிப்பாளர்கள், ஒரு படப்பிடிப்பின்போது பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சிரிக்கும், புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
பல ரசிகர்கள் சலார் 2 படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். அதற்கு சரியான பதில் கிடைக்காதநிலையில், அதன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது என்று கருத்துப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அதன் சலார் 2ஆம் பாகம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபாஸும் இயக்குநர் பிரசாந்த் நீலும் சிரித்துக்கொண்டு இருக்கும் படம் பகிரப்பட்டு, மறைமுகமாகப் பதில் உரைக்கப்பட்டுள்ளது.
சலார் பார்ட் 1: சீஸ் ஃபயர், கடந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கானின் டங்கியுடன் இப்படம் ஒரே நேரத்தில் ரிலீஸாகி மோதியது. இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டானது.
