Vishnu Manchu: கண்ணப்பா படத்தில் பிரபாஸ் செய்த செயல்.. பதிலுக்கு விஷ்ணு மஞ்சு எடுத்த முடிவு!
Vishnu Manchu: பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் நடிக்க விரும்புகிறார், விஷ்ணு மஞ்சு. இதற்கு அவர் செய்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Vishnu Manchu: கண்ணப்பா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த பிரபாஸ்ஸின் செயலால், அவரின் புது படத்தில் நடிக்க நடிகர் விஷ்ணு மஞ்சு ஆர்வம் காட்டுகிறார்.
பான் இந்தியா ’ரெபெல் ஸ்டார்’ எனப் புகழப்படுபவர், பிரபாஸ். இவர் தொடர் படங்களில் நடித்துக்கொண்டு தற்போது பிஸியாக உள்ளார்.
தற்போது தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் 'தி ராஜா சாப்' மற்றும் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும், அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகியப் படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளி வரவிருக்கும் ’’ஸ்பிரிட்’’ படத்திற்கான மோகம் ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலில் உள்ளது.
’ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன் பாபுவின் மகன் ஹீரோ மஞ்சு விஷ்ணு, ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள செய்தி வைரல் ஆகியுள்ளது.
விண்ணப்பித்துள்ளேன்.. பொறுத்திருந்து பாருங்கள்: விஷ்ணு மஞ்சு
சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சமூக ஊடக பக்கத்தில், ஸ்பிரிட் படத்தில் நடிக்க வளர்ந்து வரும் நடிகர்கள் தேவை என அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்தப் படத்தில் நடிக்க விரும்புபவர்கள் வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு காஸ்டிங் கால் அறிவித்தார்.
இதனைப் பார்த்த நடிகர் விஷ்ணு மஞ்சு, ஸ்பிரிட் படத்தில் நடிக்க கதாபாத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார். இது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு மஞ்சுவின் ஆசை நிறைவேறுமா?
நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த கண்ணப்பா படத்தில், நடிகர் பிரபாஸ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க விரும்புவதாக விஷ்ணு மஞ்சு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்தான இறுதி முடிவு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் கைகளில் இருக்கும் என்று தெரிகிறது. ’ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க வேண்டும் என்ற விஷ்ணுவின் விருப்பத்தை சந்தீப் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
விஷ்ணு மஞ்சுவின் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த பிரபாஸ்:
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் படத்தில் ‘கண்ணப்பா’ படத்தில் நடிக்க பிரபாஸ் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று விஷ்ணு மஞ்சு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இப்படத்தில் ’ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கழுத்தில் ருத்ராட்சஸம், நெற்றியில் பெயர்களுடன் துறவியாக பிரபாஸ் நடித்த தோற்றம் வெளியானது.
இந்த கதாபாத்திரம் சிவபெருமானுக்கு உரிய கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. புராண படமான ’கண்ணப்பா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கி இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் மோகன் பாபு, சரத் குமார், மோகன் லால்,அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன்,காஜல் அகர்வால், மதுபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் இங்கிலீஸில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க: விஷ்ணு மஞ்சுவின் சமீபத்திய பேட்டி
மேலும் படிக்க: பிரபாஸ் நடித்த கல்கி படம் எத்தகையது?
பிரபாஸ் நடிப்பில் வரவிருக்கும் படங்கள்:
இந்நிலையில் பிரபாஸ், ராஜா சாப் என்னும் படத்திலும், இயக்குநர் ஹனு ராகவபுடியுடன் ஒரு படத்திலும், ஸ்பிரிட் மற்றும் சில படங்களிலும் இருக்கிறார்.
அதேபோல், சலார் 2 மற்றும் கல்கி 2 போன்ற படங்களிலும் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்நிலையில் ’தி ராஜா சாப்' இந்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதாக இருந்த படம் தள்ளிப்போகிறது. இந்தப் படத்தை ஹாரர் காமெடி படமாக மாருதி இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் முழு நீள பொழுதுபோக்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹனு ராகவபுடியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ஒரு பீரியட் ஆக்ஷன் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. சந்தீப் ஏற்கனவே ஸ்பிரிட் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார். இப்படத்தில் பிரபாஸ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெற்றி அடைந்த படம்

தொடர்புடையை செய்திகள்