Tamil News  /  Entertainment  /  Powlen Missing I Phone Found

Tamil actress pauline death: நடிகை பவுலின் தற்கொலையில் திடீர் திருப்பம்

நடிகை பவுலின்
நடிகை பவுலின்

பவுலின் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் ஐபோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் பவுலின். இதனையடுத்து அவர் இயக்குநர் மகிவர்மன் இயக்கிய வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அருகேயுள்ள மல்லிகை அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்தார். வீட்டில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் காதல் கை கூடாததால் தற்கொலை செய்து கொள்வதாக தீபா கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அதை கைப்பற்றிவிட்டதாக கூறினர்.

அவருக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான சிராஜுதீன் காரணம் என தெரியவந்தது. 

பவுலின் தற்கொலை விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் அவரின் வீட்டிற்கு சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் முதல் ஆளாய் அவசர அவசரமாக வரும் காட்சிகள் வெளியானது. தொடர்ந்து அவரின் ஐ போன் மாயமானதாக அவரது சகோதரர் ராஜு புகார் கொடுத்தார்.

 இந்நிலையில் பவுலின் காணமால் போன, ஐ போன் கண்டு பிடித்துள்ளது. ஏற்கனவே அவரின் மூன்று செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்