ஷாக்.. பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் காலமானார்!
பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் கோதண்டராமன். இவர் கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கலகலப்பு என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல படங்களில் துணை வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரையுலக பிரபலங்கள் இரங்கல்
மேலும் விஜய், அஜீத் நடித்த ஆக்சன் படங்களான பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்ற படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருக்கு தற்போது 65 வயது ஆகும். இந்நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோதண்டராமன் சிறு வயதிலேயே கராத்தே, பாக்சிங் மீது ஆர்வம் கொண்டு அவற்றை கற்றார். இவரது ஆர்வத்தினைப் பார்த்த கராத்தே மாஸ்டர் இவரை ஸ்டண்ட் யூனியனில் சேர்த்துள்ளார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக உயர்ந்தார்.
நடிகர் முரளியுடன் அதிக படங்களில் பணியாற்றியிருக்கிறார்
இவர் மறைந்த நடிகர் முரளியுடன் அதிக படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே என் பொண்டாட்டி தான், எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் இவருக்கு புதிய அடையாளத்தினைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது வீட்டில் காலமானர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்