Poornima: மாயா தான் உண்மையான வின்னர்.. சர்ச்சை கிளப்பிய பூர்ணிமா!-poornima says maya is the real winner in bigg boss 7 tamil - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Poornima: மாயா தான் உண்மையான வின்னர்.. சர்ச்சை கிளப்பிய பூர்ணிமா!

Poornima: மாயா தான் உண்மையான வின்னர்.. சர்ச்சை கிளப்பிய பூர்ணிமா!

Aarthi Balaji HT Tamil
Jan 19, 2024 09:05 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிந்த நிலையில் உண்மையான வின்னர் மாயா என பூர்ணிமா கூறினார்.

பூர்ணிமா, மாயா
பூர்ணிமா, மாயா

இந்நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் பூர்ணிமா தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனின் டாப் பைனலிஸ்ட் போட்டியாளர்களான அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஐந்து பேரையும் வாழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ இறுதிப் போட்டிக்கு வந்த ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள். நான் முன்பே சொன்னது போல் வெற்றி பெறுவது அல்ல பிழைப்பது. சீசன் முழுவதும் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். உங்கள் அனைவரும் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

நான் உங்களுடன் வீட்டிற்குள் செலவழித்த நேரம் மிகவும் பிடித்திருந்தது. நீங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணிங்க கண்டிப்பா வருவேன், சோறு போடுங்க. அப்டியே அந்த ட்ரிப் முக்கியம்.

மணி, நீங்கள் ஒரு வேடிக்கையான நபர், நிகழ்ச்சியில் உங்கள் இருப்பை மகிழ்வித்தீர்கள் மற்றும் வாழ்த்துக்கள் டா.

மாயா, நீங்க ஒரு போராளி. என் உண்மையான வெற்றியாளர். சொல்ல வேண்டியதெலாம் கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம் சொல்லிவிட்டேன். லவ் யூ.

தினேஷ் அன்புள்ள நல்ல உள்ளம். ஆட்டமில்லாத தினேஷை வெளியே காண காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

விஷ்ணு, ஏண்டா டேய். மிகவும் போட்டி மற்றும் உறுதியானவர். ஆல் தி வெரி பெஸ்ட். நான் சொன்னது போல் ஒரு தொலைபேசி அழைப்பில் இருக்கிறேன் நண்பர்களே. டேய் தொடர்பில் இருங்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் பூர்ணிமா இடையே பலமான நட்பு இருந்தது. இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து அனைவரையும் டார்கெட் செய்தார்கள். அதனால் இவர்கள் இருவரும் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் அவர்கள் தங்களது நட்பை விட்டு கொடுக்காமல் இருந்தனர். கடைசி வரை எப்படியாவது மாயா வெற்றி பெற வேண்டும் என பூர்ணிமா வேண்டி கொண்டே இருந்தார். ஆனால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அர்ச்சனா டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் காரணமாகவே பூர்ணிமாவே, மாயா தான் நிஜ டைட்டில் வின்னர் என பதிவிட்டு இருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.