Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி

Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 14, 2025 06:31 PM IST

Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும் என பூர்ணிமா பாக்யராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ்
Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ்

ஐபிசி மங்கை யூட்யூப் சேனலில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ், தன் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

வெகுநாட்கள் நீங்கள் சினிமாவில் நடிக்காமல் விட்டுடீங்களே?

‘எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. அந்த டைமில் நாம் நினைச்சதை செய்ததுதான் சரின்னு நினைச்சிருக்கிறேன். அந்த சமயத்தில் ஃபேமிலியையும் சினிமாவையும் வெற்றிகரமாக எடுத்திட்டுப் போறது, கஷ்டமாக இருக்கும். அதனால், சினிமாவை முழுக்க விட்டுட்டேன். இன்றைய காலகட்டத்தில் இது பாஸிபிளான விஷயம் தான். அதனால் பாதியாவது சினிமாவில் இருந்திருக்கலாம். ஏனென்றால், மீண்டும் நடிக்க வரும்போது ஜெனரேஷன் கேப் ஆகிடுச்சு. இருந்தாலும் நான் திரும்பவும் நடிக்கிறது ஹேப்பியான விஷயம் தான்’.

வயசு ஆகாமல் இருக்க என்ன செய்யணும்?

’முதலில் மைண்ட்டை ஆக்டிவ் ஆக வைச்சுக்கணும். அவ்வளவு தான். வயசு முகத்தில் எல்லோருக்கும் தெரியத்தான் செய்யும். எங்கு தான் நான் வெளியில் போனாலும், ஃபேஸ் வாஸ் செய்யாமல், நான் தூங்கியது கிடையாது. தோலை பத்திரமாகப் பார்த்துப்பேன். எப்போதாவது பியூட்டி பார்லர் போவேன்’.

ஹேப்பி ஃபேமிலிக்குப் பின் இருக்கும் சீக்ரெட் என்ன?

’எங்களுக்கு கஷ்டம் வரலைன்னு நினைக்குறீங்களா? எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி யாருக்கும் வரக்கூடாதுனு நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்த சினிமா துறை அப்படி. அந்தளவுக்கு நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். நாங்கள் எல்லோருமே என்ன நினைத்தோம் என்றால், ஒரு குடும்பமாக இதைக் கடக்க வேண்டும் என்று நினைத்தோம். கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை, நாம் ஒன்றாக இருக்கிறோம் இல்லையா என்று தான் நாங்கள் நினைத்தோம்’.

ஒரு குடும்பம் உடையாமல் கூட்டுக்குடும்பமாக வைத்துக்கொள்வது எப்படி?

’நியூக்ளியர் ஃபேமிலி நல்லது தான். கல்யாணத்துக்கு முன் நான் நியூக்ளியர் ஃபேமிலி தான். கல்யாணத்துக்குப் பின் தான், நான் கூட்டுக்குடும்பமாகவே மாறுனேன். கல்யாணம் ஆன புதிதில் பெரியவங்க கூட இருந்தாங்க என்றால், சின்ன சின்ன விஷயத்தை எப்படி கையாள்றதுன்னு பெரியவங்க, சொல்லிக் கொடுப்பாங்க.

நியூக்ளியர் ஃபேமிலியில் இருக்கும்போது, கொஞ்சம் தனிமையாக இருந்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றுவது உண்மைதான். ஆனால், அதற்கு ஹாலிடேஸ்-க்கு வெளியில் போகலாம்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு புருஷன், பொண்டாட்டி இடையில் புரிதல் வருவதற்கு பெரியவங்க இடையில் இருக்கணும். நான் கல்யாணம் ஆன புதிதில், சாரோட பாட்டி இருந்தாங்க. எங்க அம்மா வந்தாங்க. எங்கப்பா வந்தாங்க. எங்களுக்கிடையில் பிரச்னை வந்தால், கோபப்பட்டு உட்கார்ந்து இருந்தால், அப்படி இருக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு ஆள் இருந்தாங்க. அதேமாதிரி குழந்தைகளும் அவங்களோட ரெஸ்பான்ஸை புரிஞ்சுக்கணும்.

சின்ன குழந்தைகளைவிட வளர்ந்த குழந்தைகளுக்குப் புத்தி சொல்றதுக்கும் பெரியவங்க குடும்பத்தில் இருக்கிறது முக்கியம்’.

சினிமாவைப் பொறுத்தவரை, சினிமாக்காரர்களை கல்யாணம் செய்துகொண்டால், நீடிக்காது என்று சொல்றாங்க. நீங்கள் இவ்வளவு வெற்றிகரமாக வந்திருக்கீங்க. அது பத்தி?

என் முன்னாடியே சொன்னாங்க, இதெல்லாம், ஒரு வருஷம் கூட தாங்காதுன்னு. எல்லா திருமண வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்துப் போறது இருக்கணும்.

எப்பவுமே நாம் தான் ஜெயிக்கணும் என்றால், நாம் கல்யாணமே பண்ணிக்காம இருக்கலாம். கல்யாண வாழ்க்கையில் ஜெயிக்க, சில நேரம் நாம் தோற்கவும் செய்யணும். சந்தோஷமான நாட்களும் இருக்கு. கஷ்டமான நாட்களும் இருக்கு. இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை.

உங்கள் வீட்டில் யார் அட்ஜெஸ்ட் செய்து போவாங்க?

அவர்கிட்ட கேட்டால் நான் தான் சொல்வார். அவர் வேலையில் இருக்கும்போது நான் விட்டுக்கொடுத்துப்போயிடுவேன். நான் பரபரப்பாக இருக்கும்போது எனக்கு அந்த பொறுமை இருக்காது. கோபமாக வரும். அப்போது அவர் என்னை கூல் செய்வார். இப்படி தான் போகணும்.

நன்றி: ஐபிசி மங்கை யூட்யூப்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.