தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Poonam Pandey Was Highly Criticised, But She Showed Us How To Live Unabashedly: Chinmayi Sripaada

Chinmayi Sripaada: அவள் நட்சத்திரக்குழந்தை.. கூச்சமின்றி வாழ்ந்தவள்;மனிதர்களை மட்டும்..’ - பூனம் பாண்டே குறித்து சின்மயி

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2024 11:14 AM IST

அவள் நட்சத்திரக்குழந்தை. அவர் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். பூனம், பூமியில் பயணம் செய்தமைக்கு மிகவும் நன்றி.

பூனம் பாண்டே!
பூனம் பாண்டே!

ட்ரெண்டிங் செய்திகள்

பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக பூனம் பாண்டேவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். இந்த நிலையில், அவரது இறப்பு குறித்து பிரபல பாடகி சின்மயி ட்விட்டரில் கருத்து ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், “ பூனம் பாண்டே நாகரீகமாக வாழ்ந்த வாழ்க்கை முறைக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கூச்சமின்றி வாழவும், தன்னை நம்பி நிற்பதையும் அவர் வெளிக்காட்டினார். 

 

அவள் நட்சத்திரக்குழந்தை. அவள் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறாள். பூனம், பூமியில் பயணம் செய்தமைக்கு மிகவும் நன்றி.

பாதுகாப்பான பயணத்திற்கும், உங்களின் கனிவான புதிய உலகத்திற்காகவும் உங்களை நான் வாழ்த்துகிறேன். நீங்கள் மறுபிறவி எடுக்க விரும்பினால், நீங்கள் இங்கு வந்து மனிதர்களை சந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். காரணம், நீங்கள் மேற்படி சொன்னதை விடவும் அதிக தகுதிஉடையவர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக, இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பாண்டே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

இவர் தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் கோவாவிற்கு தேனிலவுக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாம் பாம்பே தன்னை மிகவும் அடித்து கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு மீண்டும் சமரசமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அதே ஆண்டு பிரிந்தனர்.

2013 ஆம் ஆண்டு வெளியான 'நஷா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம். அவர் கடைசியாக 'லாக் அப்' என்ற ரியாலிட்டி ஷோவில் தோன்றினார். 

முன்னதாக பூனம் பாண்டே, கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோவான லாக் அப் நிகழ்ச்சில் கலந்து கொண்ட போது, அவரிடம் இன்னும் முன்னாள் கணவர் மீது காதல் இருக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பூனம் பாண்டே, "ஆமாம்.. நான் இன்னும் அவரை காதலிக்கிறேன். நான் இப்போதும் அவரை வெறுக்கவில்லை. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. யாரும் இதுபோன்ற நிலைமை வரக் கூடாது. எனக்கு வீடு, தனித்தோட்டம், தனி மொட்டை மாடி எல்லாம் இருந்தது.

சொல்லப் போனால் அது ஒரு பெரிய வீடு. நான் ஒரு அறையில் இருந்தால், அந்த அறையில் இருக்க அனுமதி இல்லை. நீ ஏன் அந்த அறையில் இருக்கிறாய் என்று அவர் என்னிடம் கேட்பார்.

அவர் விரும்பும் அறையில் என்னை அவருடன் இருக்குமாறு வற்புறுத்துவார். சுத்தமான காற்று சிறிது நேரம் வேண்டும் என்று நான் மொட்டை மாடிக்கு செல்ல விரும்புவேன், அதை அவரிடம் சொல்லும்போது, ​​அதற்கு அனுமதிக்கமாட்டார். அவரும் என்னுடன் வர மாட்டார். சொந்த வீட்டில் எனது தொலைபேசியைத் தொட அனுமதிக்கப்படவில்லை.

எனக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். அது என்னுடன் தூங்கினால், நான் அவரை விட என் நாய்களை நேசிக்கிறேன் என்று அவர் சொல்வார். அது என்ன வகையான சிந்தனை என்று எனக்கு தெரியவில்லை. என் நாய்களை நேசித்ததற்காக நான் ஏன் அடிக்கப்பட வேண்டும்?.

அவர் அடித்த அடியினால் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதையெல்லாம் நான் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டு இருந்தேன். நான்கு ஆண்டுகளாக அந்த வலியோடு அவருடன் நான் வாழ்ந்து வந்தேன். இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்து இருக்கிறது. 

என் மூளையில் காயம் குணமடையவில்லை, ஏனென்றால் அவர் என்னை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடித்துக்கொண்டே இருப்பார். நான் மேக்கப் போட்டு, பளபளப்பாக்கி, சிரிப்பேன். எல்லோருக்கும் முன்பு நான் அதை மறைக்க விரும்பி கூலாக நடிப்பேன். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடிபடுவது வழக்கமாக இருந்தது “ என பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.