தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Poonam Pandey Notice To Poonam Pandey Who Caused Controversy For Dying Of Cancer

Poonam Pandey : புற்றுநோயால் மரணமடைந்ததாக சர்ச்சையை கிளப்பிய பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 07, 2024 01:28 PM IST

பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 இன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

பூனம் பாண்டே
பூனம் பாண்டே

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் தான் உயிரோடு இருக்கிறேன். கர்ப்பப்பை புற்று நோய்க்கான விழிப்புணர்வு பதிவு என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பூனம் பாண்டேவின் இந்த நடவடிக்கை பலரிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மகாராஷ்டிரா மாநில உறுப்பினர் சத்தியஜித் தாம்பே பூனம் பாண்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 இன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பூனம் பாண்டேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அமித்ராய் என்பவர் தனது வழக்கறிஞர் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதி மற்றும் மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக சில தினங்களுக்கு முன் காலை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.

பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட பதிவில், “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் அவரை அன்புடன் சந்தித்தனர். இந்த துயர நேரத்தில், நாங்கள் தனியுரிமையை கோருவோம். நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்திற்கும் அவரை அன்புடன் நினைவில் கொள்வோம் ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் பதிவு பலரை கவலையில் ஆழ்த்தியது. சினிமா பிரபலங்கள் ரசிகர் என பல தரப்பினரும் அவரது மறைவிற்கு இரங்கல் சமூக வலைதளங்களில் தங்களது இரங்களை தெரிவித்து வந்தனர்.  இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தோன்றி கடந்த 3ம் தேதியன்று புதிய வீடியோ ஒன்றை பூனம் பாண்டே வெளியிட்டுடிருந்தார்

அதில், முக்கியமான ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் - நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை. ஆனால் இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் ஆயிரக்கணக்கான பெண்களின் மரணம் அடைந்துள்ளனர். 

இது மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நம்மால் முற்றிலும் வராமல் தடுக்க முடியும். HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.