Poonam Pandey Died: அதிர்ச்சி.. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பூனம் பாண்டே உயிரிழப்பு!
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம் அடைந்த செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பாண்டே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்தார்.
இவர் தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் கோவாவிற்கு தேனிலவுக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாம் பாம்பே தன்னை மிகவும் அடித்து கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு மீண்டும் சமரசமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அதே ஆண்டு பிரிந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட பதிவில், “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் அவரை அன்புடன் சந்தித்தனர். இந்த துயர நேரத்தில், நாங்கள் தனியுரிமையை கோருவோம். நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்திற்கும் அவரை அன்புடன் நினைவில் கொள்வோம் ” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் பதிவு பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமா அல்லது கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என அவரது பதிவில் உள்ள சில கருத்துகள் ஆச்சரியமாக உள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளியான 'நஷா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம். அவர் கடைசியாக 'லாக் அப்' என்ற ரியாலிட்டி ஷோவில் காணப்பட்டார்.
பூனம் பாண்டே ஒரு பன்முக ஆளுமை, பொழுதுபோக்கு துறையில் தனது பணிக்காக மட்டுமல்லாமல் சமூக ஊடக தளங்களில் அவரது துடிப்பான இருப்புக்காகவும் அறியப்படுகிறார். ஒரு மாடலாகவும் நடிகையாகவும் அவரது பயணம் பார்வையாளர்களை கவர்ந்தது.
திரையில் அவரது திறமை மற்றும் கவர்ச்சியை வெளிப்படுத்தியது. அவரது தொண்டு முயற்சிகள் பலரது இதயங்களில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.
முன்னதாக னம் பாண்டே, கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோவான லாக் அப் நிகழ்ச்சில் கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் இன்னும் முன்னாள் கணவர் மீது காதல் இருக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பூனம் பாண்டே, "ஆமாம்.. நான் இன்னும் அவரை காதலிக்கிறேன். நான் இப்போதும் அவரை வெறுக்கவில்லை. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. யாரும் இதுபோன்ற நிலைமை வரக் கூடாது. எனக்கு வீடு, தனித்தோட்டம், தனி மொட்டை மாடி எல்லாம் இருந்தது.
சொல்லப் போனால் அது ஒரு பெரிய வீடு. நான் ஒரு அறையில் இருந்தால், அந்த அறையில் இருக்க அனுமதி இல்லை. நீ ஏன் அந்த அறையில் இருக்கிறாய் என்று அவர் என்னிடம் கேட்பார்.
அவர் விரும்பும் அறையில் என்னை அவருடன் இருக்குமாறு வற்புறுத்துவார். சுத்தமான காற்று சிறிது நேரம் வேண்டும் என்று நான் மொட்டை மாடிக்கு செல்ல விரும்புவேன், அதை அவரிடம் சொல்லும்போது, அதற்கு அனுமதிக்கமாட்டார். அவரும் என்னுடன் வர மாட்டார். சொந்த வீட்டில் எனது தொலைபேசியைத் தொட அனுமதிக்கப்படவில்லை.
எனக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். அது என்னுடன்தூங்கினால், நான் அவரை விட என் நாய்களை நேசிக்கிறேன் என்று அவர் சொல்வார். அது என்ன வகையான சிந்தனை என்று எனக்கு தெரியவில்லை. என் நாய்களை நேசித்ததற்காக நான் ஏன் அடிக்கப்பட வேண்டும்?.
அவர் அடித்த அடியினால் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதையெல்லாம் நான் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டு இருந்தேன். நான்கு ஆண்டுகளாக அந்த வலியோடு அவருடன் நான் வாழ்ந்து வந்தேன்.
இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்து இருக்கிறது. என் மூளையில் காயம் குணமடையவில்லை, ஏனென்றால் அவர் என்னை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடித்துக்கொண்டே இருப்பார். நான் மேக்கப் போட்டு, பளபளப்பாக்கி, சிரிப்பேன். எல்லோருக்கும் முன்பு நான் அதை மறைக்க விரும்பி கூலாக நடிப்பேன். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடிபடுவது வழக்கம் “ என பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்