Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே!

Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே!

Marimuthu M HT Tamil
Jan 30, 2025 04:25 PM IST

Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே உடைய பேச்சு வைரல் ஆகியுள்ளது.

Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே!
Pooja Hegde: 'என் கசப்பான பக்கத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்'- உருக்கமாக கூறிய பூஜா ஹெக்டே!

தேவா என்கிற இந்தி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பிரதான நடிகர்களான ஹாஹித் கபூர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவர், இந்துஸ்தான் டைம்ஸ் நகருக்கு வருகை தந்து, அப்படம் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக, இருவரும் தாங்கள் இந்த சமீபத்திய படத்தில் தங்களை ஈர்த்தது பற்றி, இந்துஸ்தான் டைம்ஸின் பொழுதுபோக்கு மற்றும் லைஃப் ஸ்டைல் துறையின் தலைமை நிர்வாக ஆசிரியர் சோனல் கல்ராவும் அதைப் பகிர்ந்துகொண்டனர்.

பாலிவுட்டில் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக இருப்பவர், நடிகர் ஷாஹித் கபூர். அவர் இந்த தேவா படத்தில் நடித்தது பற்றி கூறியிருப்பதாவது, "ஒரு நடிகராக தேவா மிகவும் சவாலான படம்; இது ஒரு வணிக உலகிற்குள் தள்ளப்படும் ஒரு சிக்கலான கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. மேலும், இந்தப் படம் ஒரு அதிரடி த்ரில்லர் படம்.

நான் இன்னும் செய்யாத கதாபாத்திரத்தைத் தான் இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறேன். நான் எப்போதும் மக்களை ஆச்சரியப்படுத்தும் மற்றும் அவர்களுக்கு புதிய ஒன்றைத் தரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன்’’ என்றார், நடிகர் ஷாஹித் கபூர்.

‘’மனதில் பட்டதை சொல்ல பயப்படாத கதாபாத்திரம்’’: நடிகை பூஜா ஹெக்டே

இதற்கிடையில், அதே, தேவா என்னும் படத்தில் புலனாய்வு பத்திரிகையாளராக நடிக்கும் பூஜா ஹெக்டே, கூறுகையில், "எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, நானும் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்பிய மனநிலையில் இருந்தேன். அது ஒரு நடிகையாக நான் வரையறுக்கப்படும் விதத்தை மாற்றும்.

தென்னிந்திய சினிமாவில் நான் என்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இந்தி பார்வையாளர்கள் என்னைப்போன்ற கசப்பான பக்கத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.

இந்த தேவா படத்தில், என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது; மனதில் பட்டதைச் சொல்ல பயப்படாத கதாபாத்திரமாக இருந்தது.

மேலும், எனது சொந்த ஊரான மும்பையில் நான் சூட்டிங்கில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. மும்பை நகரின் மையப்பகுதியில் சூட்டிங் நடந்தது மிகவும் உற்சாகமாக நடந்தது’’ என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

'நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தை தான் தான் தேர்வுசெய்யவேண்டும்': நடிகர் ஷாஹித் கபூர்

2019ஆம் ஆண்டு வெளியான கபீர் சிங் படத்தில் நடித்தமைக்காக, நடிகர் ஷாஹித் கபூர், குடும்ப ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் தன் மீதான விமர்சித்திற்கு தற்போது பதில் அளித்துள்ள நடிகர் ஷாஹித் கபூர், இந்த கதாபாத்திரத்தை ஏற்கலாமா வேண்டாமா என சந்தேகம் வரும்போது, நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மையைப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதில் நடிகர் ஷாஹித் கூறியதாவது, "ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். அதை நீங்கள் சொந்தமாக எடுக்க வேண்டும். எனது கதாபாத்திரங்களை எனது குழுவினர், நண்பர்கள், எனது தந்தை (நடிகர் பங்கஜ் கபூர்) ஆகியோருடன் விவாதிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் உங்கள் மனைவி மீரா ராஜ்புத் கபூரிடம் இப்படி படம் குறித்து கேட்பீர்களா என நடிகர், ஷாஹித் கூறியபோது, "அவள் கருத்துகள் வேறுமாதிரியானவை. என்னால் அவளை வாங்க முடியாது" என்று நகைச்சுவையாக கூறினார்.

ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது - நடிகை பூஜா ஹெக்டே!

பாலிவுட் படங்களில் தனக்கென அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே, படப்பிடிப்பின்போது தனது சக நடிகரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அதில், "ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிவது எளிது. ஏனென்றால் நீங்கள் அவர்களுக்கு ரியாக்ட் செய்வீர்கள் அவ்வளவுதான். க்ளோஸ்-அப் காட்சிகள் எனக்கு நினைவிருக்கிறது. அங்கு நடிகர் ஷாஹித் கபூர் மிகவும் நன்றாக நடித்தார். 'நான் மீண்டும் என் ஷாட்டை செய்ய வேண்டுமா?' என்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஷாஹித் கபூரின் நடிப்பில் உண்மை இருக்கிறது. அதைக் காட்டினால் போதும்" என்று கூறி முடித்தார், நடிகை பூஜா ஹெக்டே.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.