தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pooja Hegde: நான் உங்களுக்கு ப்ளாப் நடிகையா?.. சூர்யா ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை! - விபரம் உள்ளே!

Pooja Hegde: நான் உங்களுக்கு ப்ளாப் நடிகையா?.. சூர்யா ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை! - விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2024 06:51 PM IST

Pooja Hegde: “இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது” - விபரம் உள்ளே!

Pooja Hegde: நான் உங்களுக்கு ப்ளாப் நடிகையா?.. சூர்யா ஜோடியாகும் பீஸ்ட் பட  நடிகை! - விபரம் உள்ளே!
Pooja Hegde: நான் உங்களுக்கு ப்ளாப் நடிகையா?.. சூர்யா ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை! - விபரம் உள்ளே!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் அவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்தத்திரைப்படமும் அவருக்கு பெரிதான வரவேற்பை கொடுக்கவில்லை.இதற்கிடையே அவரது நடிப்பில் படங்களும் தோல்வி அடைந்தன. இதனால் அவரை ப்ளாப் நடிகை என்று திரையுலகம் முத்திரை குத்தியது. இந்த நிலையில் நடிகை பூஜாவிற்கு பெரிதான வாய்ப்புகள் வராமல் இருந்தன. 

வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 44 வது திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

முன்னதாக, நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. “ இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்த பதிவில், “ நான் என்னுடைய அடுத்தப்படத்தில், எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன் சாருடன் இணைய இருக்கிறேன்” பதிவிட்டு இருந்தார். 

இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.காரணம், சூரரைப்போற்று திரைப்பட வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆன நடிகர் சூர்யா, அந்தப்படம் கால தாமதம் ஆகும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்ப வாடிவாசல் 

காரணம், விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை இரண்டாம் பாகத்தை முடித்த பின்னர், வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறி இருந்தார். இதற்கிடையே சூர்யா 44 தொடர்பான அறிவிப்பு வந்த காரணத்தால், அந்தப்படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சூர்யா 44 படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, “ இந்தக்கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.

இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்