தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ponniyin Selvan Is Set To Become The First Tamil Movie To Release In Imax

Ponniyin Selvan: ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் !

Karthikeyan S HT Tamil
Aug 16, 2022 08:23 PM IST

'பொன்னியின் செல்வன் பாகம் 1' ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாகம் பொன்னியின் செல்வன்.
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாகம் பொன்னியின் செல்வன்.

ட்ரெண்டிங் செய்திகள்

வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும், 'பொன்னி நதி பாக்கணுமே' என்ற பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்