Sobhita Dhulipala: ஹாலிவுட்டில் வானதி.. என்ன படம்.. யார் டைரக்டர்? - முழு விபரம் இங்கே!
நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.
மலையாளத்தில் ‘குரூப்’, தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சோபிதா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ ஆகிய வெப் தொடர்களில் நடித்து பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில், ஹாலிவுட்டில் சோபிதா நடித்து வெளியாக இருக்கும் படம் தொடர்பான ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கு மங்கி மேன் என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
பிரபல இயக்குநர் தேவ் படேல் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது . "விப்லாஷ்" போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட "மங்கி மேன்" திரைப்படத்தின் ட்ரெய்லர் உலகம் முழுவதும் கவனம் பெற்றது.
‘மங்கி மேன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது!
டாபிக்ஸ்