Ponnambalam: கடவுளே எனக்கு வேண்டாவே வேண்டாம்.. பொன்னம்பலத்தால் தற்கொலைக்கு முயன்ற பெண்!
Ponnambalam: காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றாலும், அது நடக்காமால் போனது என்றார் பொன்னம்பலம்.

நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற சம்பவம் குறித்து பேசினார்.
” நான் நடித்த படம் வெளியாகி 175 நாள் ஓடியது. அப்போது தான் எனக்கு திருமணம் நடக்க இருந்தது. பெண் எல்லாம் வீட்டில் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
எந்த பெண்ணும் கிடைக்கவே இல்லை. அய்யோ இவருக்காக என்று பயந்தார்கள். ஒரு பெண் தூக்கு மாட்டிக்க போனது.
காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றாலும். அது நடக்கவில்லை. அவர்கள் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது.
சரி பெண்ணை கூப்பிடுங்க என சொன்னா, கடைக்கு போய்விட்டது என சொன்னர்கள். யாரும் இல்லாத அவர்களின் மற்றொரு வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டிக்க சென்றவிட்டது.
எல்லாரும் ஓடிச்சென்று அந்த பெண்ணை காப்பாற்றிவிட்டார்கள். இது சரியான இடம் இல்லை என்று கிளம்பிவிட்டோம் “ என்றார்.
யார் இந்த பொன்னம்பலம்
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பிடித்தமான வில்லன், பொன்னம்பலம்.
சினிமாவில் 1987ஆம் ஆண்டு முதல் சண்டைக் காட்சியின்போது அடியாளாக நுழைந்த பொன்னம்பலம், 1988ஆம் ஆண்டு ’கலியுகம்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கூடுதல் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூடுதல் வில்லனாகவும்,1990ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜனில் ஒரு சிறுவேடத்திலும் நடித்தார். கை, கால்களில் காயமோ, எலும்பு முறிவோ விழாமல் ஃபைட் செய்வதில் திறம் வாய்ந்து இருந்ததால் 'ஸ்பேர் பார்ட்ஸ்' பொன்னம்பலம் எனும் பெயரும் பெற்றார். 1993ல் பி.வாசு இயக்கிய வால்டர் வெற்றிவேல் படம் இவருக்கு வில்லனாக முக்கிய திருப்புமுனையினை தந்த திரைப்படமாக அமைந்தது.
பொன்னம்பலம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமாவிலும் வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். 1988ஆம் ஆண்டு ’மூன்னம் முறா’ என்னும் மலையாளப்படத்தில் முன்னணி நடிகர் மோகன் லாலுக்கு வில்லனாகவும், அதேபோல் ஓர்க்கபுரத்து என்னும் மலையாளப் படத்திலும் நடித்திருந்தார்.
உடல்நிலைப் பாதிப்பு
திடீரென உடல் நலம் குன்றிய பொன்னம்பலத்துக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழக்க நிதி நெருக்கடி காரணமாக பல முறை தற்கொலைக்கு முயற்சித்து, தப்பித்துள்ளார். இவரின் நிலைமை அறிந்த நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், அர்ஜூன், பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி ஆகியப் பல நடிகர்கள், பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி 2023ல், குறும்பட இயக்குநர் ஜெகநாதன்(35) என்பவரது சிறுநீரகம் தானமாகப் பெற்று பொருத்தப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர்பிழைத்தார். பின் பொன்னம்பலம் தற்போது மெல்ல உடல்நலம் தேறிவருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்