Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?

Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?

Priyadarshini R HT Tamil
Nov 06, 2023 05:00 AM IST

Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆகிறது. அந்தப்படம் குறித்த நினைவுளை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?
Polladhavan : ‘நான் பொல்லாதவன்’ ரஜினியின் மாஸ்டர் பீஸ் திரில்லர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?

இந்தப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ரஜினிகாந்துக்கு இந்தப்படம் குறிப்பிடும்படியான ஒன்றாக இருந்தது. அதிலும் நான் பொல்லாதவன் என்ற பாடல் இன்று வரை பிரபலமான பாடல்.

சீதா, என்ற இளம்பெண் ரயிலில் தனது உறவினர் ராஜீவுடன் அவரது வேலைக்கான நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்காக வருவார். அங்கு ஒரு எஸ்டேட் முதலாளியின் மகளை பார்த்துக்கொள்வது அவரின் வேலை. ரயில் பயணத்தில் அவருடன் பயணம் செய்யும் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பார். ஆனால் அவர் திடீரென சுடப்பட்டு இறந்துவிடுவார். சீதா கொலையாளியின் முகத்தை நினைவு வைத்திருப்பார். அவர் போலீசில் இந்த கொலை குறித்து கூறுவார். இவருக்கு அந்த எஸ்டேட்டில் வேலை கிடைத்துவிடும்.

வெளியூர் சென்றிருந்த எஸ்டேட் முதலாளி ஊர் திரும்புவார். அப்போது அவரை பார்த்த சீதா அந்த முதலாளிதான் அந்த கொலையாளி என்பதை கண்டுகொள்வார். முதலாளி அந்த கொலை குறித்து வெளியே கூறக்கூடாது என்று மிரட்டுவார். முதலாளி நல்லவர் என்றபோதும் அவர் ஏன் கொலை செய்தார் என்ற சந்தேகம் சீதாவுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர் ஏன் கொலை செய்தார் என்பதுதான் படத்தில் உள்ள சஸ்பென்ஸ்.

படத்தில் சுருளிராஜன், டெல்லி கணேஷ், கோபாலகிருஷ்ணன், செந்தாமரை உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். நான் பொல்லாதவன் பாடல் இந்த படத்தில் மிகவும் பிரபலமான பாடல். அந்தப்படத்தில் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்று படத்திற்கு வலு சேர்த்திருக்கும். இதை தவிர அதோ வாராண்டி, நானே என்றும் ராஜா, சின்னக்கண்ணனே ஆகிய பாடல்களும் பிரபலமான பாடல்கள்தான்.

அப்போது தீபாவளிக்கு வெளியான வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் நிழல்கள் படத்தோடு ஒப்பிடுகையில் இந்தப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் ரஜினிகாந்த் தாடி வைத்து, கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருப்பார். அது பிற்காலத்தில் அவர் நடித்த பாட்ஷா படத்திற்கு பய்படுத்தப்பட்டது. இந்தப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப்படம் குறித்து சில நினைவுகளை பகிர்ந்துகொள்கிறது ஹெச்.டி தமிழ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.