போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ.. உருவ பொம்பை எரிப்பு, வீட்டில் கல் வீசி தாக்குல்! அல்லு அர்ஜுன் கோரிக்கை
போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ மூலம் அல்லு அர்ஜுன் பொய் செல்லியிருப்பது தெரியவந்துள்ளது. மாணவர் சங்கத்தினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு அவரது வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரிவியூ ஷோ பார்க்க வந்த பெண் கூட்ட நெரசலில் உயிரிழந்த விவகாரம் தெலங்கானாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவம் தற்போது தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் இடையிலான மோதாலாகவே மாறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுனின் கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்து பல விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பொறுப்புடன் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
இந்த சூழ்நிலையில், தனது ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்படுமாறு நடிகர் அல்லு அர்ஜுன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அறிக்கையில், "எனது ரசிகர்கள் அனைவரும் எப்போதும் போல் தங்களது உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையை வெளிப்படுத்த வேண்டாம்.