கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!
கடந்த 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப்பில் அழிக்கப்பட்ட குறும்செய்திகளை மீட்டும், கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணாவிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.

கோர்டு வேர்டுக்கு அர்த்தம் என்ன? - போலீசில் ஆஜரான கிருஷ்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை! - முழு விபரம்!
வாட்ஸ் ஆஃப்பில் சிலரிடம் கோர்டு வேர்டு வழியாக கிருஷ்ணா பேசியதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அர்த்தம் என்ன?
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்கு நடிகர் கிருஷ்ணா ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜர் ஆகி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா வாட்ஸ் ஆஃப்பில் நண்பரிடம் கோர்டு வேர்டில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கான அர்த்தம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல கடந்த 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப்பில் அழிக்கப்பட்ட குறும்செய்திகளை மீட்டும், கோர்டு வேர்டு மூலம் கிருஷ்ணாவிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.