தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Re Release: அடுத்த வசூல் வேட்டைக்கு ரெடியா.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் அடுத்த பிளாக்பஸ்டர் படம்

Re Release: அடுத்த வசூல் வேட்டைக்கு ரெடியா.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் அடுத்த பிளாக்பஸ்டர் படம்

Aarthi Balaji HT Tamil
Jun 07, 2024 02:19 PM IST

Re Release: விஜய்யின் அடுத்த படம் ரீ ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. ஆம்.. கில்லி பட வரவேற்பால் விஜய் படங்களை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறார்கள்.

 அடுத்த வசூல் வேட்டைக்கு ரெடியா.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் அடுத்த பிளாக்பஸ்டர் படம்
அடுத்த வசூல் வேட்டைக்கு ரெடியா.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் அடுத்த பிளாக்பஸ்டர் படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்து ரீ ரிலீஸாகும் படம் என்ன

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் ரீ ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. ஆம்.. கில்லி பட வரவேற்பால் விஜய் படங்களை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறார்கள். அதன் படி அடுத்து போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்ய தயாராகி உள்ளது. இந்த படமும் கில்லி படம் போல் வசூலில் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீண்டாமை

2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இடம் பெற்ற ‘ஆடுங்கடா என்ன சுத்தி’ பாடலில் ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இது தான் என் கருத்து’ என்ற வரிகள் தீண்டாமை குறித்தும் நாட்டில் நிலவும் சாதியம் குறித்தான விஜய்யின் பார்வையை காட்டுவதாய் அமைந்தது.

போக்கிரி பட குழு

போக்கிரி படத்தில் விஜய் தவிர அசினும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். பிரகாஷ் ராஜ், நாசர், முகேஷ் திவாரி, வடிவேலு, ஸ்ரீமன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் துணை வேடங்களில் முமைத் கான் மற்றும் பிரபு தேவாவின் கேமியோ தோற்றங்களுடன் காணப்படுகின்றனர்.

பிரபு தேவா இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ' போக்கிரி ' படத்தின் ரீமேக்கான ' போக்கிரி ' திரைப்படத்தில், மகேஷ் பாபு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். 'போக்கிரி', ரஜினி காந்தின் 'சந்திரமுகியை முந்தி சாதனை படைத்தது.

போக்கிரி வசூல்

'போக்கிரி' படத்திற்கான அதிக வரவேற்பு படத்தை பாக்ஸ் ஆபிஸ் பிளாக் பஸ்டராக மாற்றியது. மேலும் போக்கிரி படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. நகைச்சுவை மற்றும் காதல் நிரம்பிய அதிரடி- நாடகம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர்களில் ஒன்றாக மாறியது.

தீனா

விஜய்யின் கில்லி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படமும் வசூலில் படு பயங்கரமாக வசூலில் வாரி குவித்தது. 

இப்போது எல்லாம் ரசிகர்கள் புது படங்களை விட ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு அதிகமாக வரவேற்பு தருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்