Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்
கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். - அஜித் குமார்!

Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
நன்றாக படியுங்கள்
அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய மோட்டார் மீதான ஆர்வம் சிறுவயதில் ஆரம்பித்து இருந்தது. நிறைய ரசிகர்கள் என்னை தேடி இங்கு வந்திருந்தார்கள். எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, மன நிம்மதியோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நான் அந்த கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்களது குடும்பத்தை பாருங்கள். உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்; நன்றாக படியுங்கள்; உழைக்கிறவர்கள் நன்றாக உழையுங்கள்.