தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gv Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

Karthikeyan S HT Tamil
May 16, 2024 08:10 PM IST

GV Prakash kumar, Saindhavi: "பள்ளிப்பருவத்தில் இருந்து எனக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் இடையில் இருக்கும் 24 ஆண்டுகால நட்பு தொடரும்" என சைந்தவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்.
GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்.

ட்ரெண்டிங் செய்திகள்

24 வருட நட்பு தொடரும்

இந்த சூழலில், "பள்ளிப்பருவத்தில் இருந்து எனக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் இடையில் இருக்கும் 24 ஆண்டுகால நட்பு தொடரும்" என சைந்தவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளைப் புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது” என சைந்தவி தெரிவித்துள்ளார்.

சைந்தவியின் எக்ஸ் தள பதிவு

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.

எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் நிகழ்ந்தது அல்ல. மேலும், எந்த வித முகாந்திரமும் இன்றி ஒருவரின் குணத்தை குறைக்கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு.நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். பிரிந்தாலும் எங்கள் நட்பு எப்போதும் போலவே தொடரும்." எனப் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் கருத்து

இதனை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், "தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி." என தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழியான சைந்தவியை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்

இந்த விவகாரம் தொடர்பாக ஜி. வி. பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். "புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது " யாரோ ஒரு தனி நபரின் " வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..?

இருவரும் பரஸ்பரம் ஒப்பு கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள். உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது.

என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களில் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி " எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்